இந்தியா பி அணியை கூட சாய்க்க முடியாது.. பாகிஸ்தான் இதை செய்யலன்னா பாதாளம் தான்.. கவாஸ்கர் பேட்டி

Sunil Gavaskar
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 நாட்களுக்குள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இத்தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராகவும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளால் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய பாகிஸ்தான் அணியால் இந்தியா பி அணியை கூட சாய்க்க முடியாது என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானிடம் இயற்கையாகவே திறமை இருந்தும் இப்படி தடுமாறுவது தமக்கு ஆச்சரியமளிப்பதாக கவாஸ்கர் கவலைத் தெரிவித்துள்ளார். திறமையான வீரர்களை கண்டறிந்து சரியாகப் பயன்படுத்தாததே பாகிஸ்தான் அணியின் இந்த சரிவுக்கு காரணம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

திறமை இருந்தும்:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சி அணியைப் பற்றி தெரியாது. ஆனால் தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான் அணி இந்தியா பி அணியை கூட தோற்கடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். முகமது ரிஸ்வான் முதல் பந்தில் பவுண்டரி அடித்ததும் தொடர்ந்து அதிரடி காட்டுவார் என்று நினைத்தேன். ஏனெனில் அதற்கு முன்பு வரை அவர்கள் மெதுவாக விளையாடினார்கள்”

“ஆனால் அப்போதும் எதுவும் மாறவில்லை. இந்திய ஸ்பின்னர்கள் தங்களுடைய ஓவர்களை வேகமாக முடிப்பார்கள் என்று தெரிந்தும் அவர்கள் எந்த அட்டாக்கும் செய்யாதது ஆச்சரியமாக அமைந்தது. பெஞ்சில் வலுவான வீரர்கள் இல்லாததே பாகிஸ்தான் இப்படி தடுமாறுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன். பாகிஸ்தானில் எப்போதும் இயற்கையான திறமை இருக்கும்”

- Advertisement -

தடுமாறும் பாகிஸ்தான்:

“அவர்கள் டெக்னிக்கல் அளவில் எப்போதும் சரியாக இருக்க மாட்டார்கள். ஆனால் இன்சமாம் உல் ஹக் போல அவர்களுடைய வீரர்கள் தங்களுடைய உள்ளுணர்வுகளைப் புரிந்து அசத்தக்கூடியவர்கள். அவர்கள் பேட்டிங் செய்யும் விதத்தை நீங்கள் இளம் வீரர்களுக்கு பரிந்துரை செய்ய மாட்டீர்கள். ஆனால் இன்சமாம் மிகவும் சிறந்த பொறுமையைக் கொண்டவர். அவரைப் போன்ற வீரரை பாகிஸ்தான் தற்போது உருவாக்க முடியாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”

இதையும் படிங்க: சிக்கலில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.. கடைசி நேரத்தில் விலக வாய்ப்பு – விவரம் இதோ

“இந்தியா எப்படி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிறைய தரமான இளம் வீரர்களை உருவாக்குகிறது? ஐபிஎல் காரணமாகவும் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவதன் காரணமாகவும் இந்தியாவுக்கு நல்ல வீரர்கள் கிடைக்கிறார்கள். பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் தொடர் இருக்கிறது. எனவே அதைப் பயன்படுத்தி எப்படி தரமான வீரர்களை கண்டறியலாம் என்பதைப் பற்றி பாகிஸ்தான் ஆராய வேண்டும். அவர்களால் முன்பு போல பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் தரமானவர்களாக தற்போது உருவாக்க முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement