தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல அந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெறுவது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். அதே சமயம் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வருகிறது.
எனவே இத்தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். மறுபுறம் பாகிஸ்தானை சமீபத்தில் அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 என்ற கணக்கில் முதல் முறையாக தோற்கடித்து வங்கதேசம் வரலாறு படைத்தது. அதே போல இந்தியாவிலும் நாங்கள் வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ தொடர்ச்சியாக சவால் விடுத்து வருகிறார்.
அஸ்வினால் தப்பினோம்:
இந்நிலையில் தாக்காவில் நடைபெற்ற 2022 டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் 145 ரன்களை துரத்திய இந்தியா 56-5 என தடுமாறியது. அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 9வது இடத்தில் களமிறங்கி 42* ரன்கள் குவித்து வங்கதேசத்திடம் முதல் முறையாக சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றினார். எனவே தற்போது பாகிஸ்தானை தோற்கடித்துள்ள வங்கதேசத்திடம் இந்தியா கவனத்துடன் விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் நடைபெற்ற 2 போட்டிகளில் வென்றதன் வாயிலாக வங்கதேசம் தங்களை பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தங்களுடைய சொந்த வங்கதேச வீரர்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சண்டையை வழங்கினர். தற்போது பாகிஸ்தான் தொடரை வென்றதால் அவர்கள் இந்தியாவை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்”
கவாஸ்கர் எச்சரிக்கை:
“அவர்கள் அணியில் சில சிறந்த மற்றும் புதிய நம்பிக்கைக்குரிய வீரர்கள் உள்ளனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய ஆரம்பகால முயற்சிகளை வகைப்படுத்துவது பிரமிப்பு இல்லை. எனவே பாகிஸ்தானை வீழ்த்தியது போல் அவர்கள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கலாம். அதனால் இது ஒரு நல்ல தொடராக இருக்கும்”
இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்பது சட்டமல்ல.. மும்பை அணியில் ஏற்படவுள்ள மாற்றம்
“இந்தியா அடுத்த நான்கரை மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு அந்த 10 போட்டிகளில் இந்தியா குறைந்தது 5 வெற்றிகளை பெறுவது அவசியம். ஆனால் அந்த 5 போட்டிகளும் இந்தியாவுக்கு எளிதாக இருக்காது. எனவே இந்த கோடை காலம் நமக்கு சுவாரசிய மிகுந்த கிரிக்கெட்டை கொடுக்கும்” என்று கூறினார்.



