- Advertisement -
இந்திய கிரிக்கெட்

லார்ட்ஸில் இந்தியாவின் கையிலிருந்த வெற்றி பறிபோக.. கேஎல் ராகுலின் அந்த ஆசையே காரணம்.. கவாஸ்கர் அதிருப்தி

இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டியில் 22 ரன்கள் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டர் பேட்டிங்கில் ராகுல் மட்டுமே 39 ரன்கள் எடுத்தார்.

அவரை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் லோயர் ஆர்டரில் டெய்ல் எண்டர்களை வைத்துக்கொண்டு ஜடேஜா 61* ரன்கள் எடுத்தும் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை. இந்நிலையில் அப்போட்டியில் சதமடிக்க வேண்டும் என்ற ராகுலின் ஆசையே இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது முதல் இன்னிங்ஸில் ராகுல் – ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.

- Advertisement -

கேஎல் ராகுல் ஆசை:

141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியால் இந்தியா முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 3வது நாள் உணவு இடைவெளிக்கு முன் சதமடிக்க வேண்டும் என்று ராகுல் விரும்பினார். அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுப்பதற்காக ரிஸ்க் எடுத்து ஓடிய ரிஷப் பண்ட் 78 ரன்னில் ரன் அவுட்டானார். மறுபுறம் உணவு இடைவெளக்கு பின் சதத்தை அடித்த ராகுல் 100 ரன்னுக்கு மேல் எடுக்கவில்லை.

அதனால் 387 ரன்கள் மட்டுமே அடித்த இந்தியா ஸ்கோரை சமன் செய்து முன்னிலை பெறாதது திருப்பு முனையாக அமைந்ததாக கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதுவே பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதற்கு முன்பு வரை அவர்கள் இருவருமே நெருப்பு மற்றும் பனிக்கட்டியை போன்ற கலவையைப் போல பேட்டிங் செய்தனர்”

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:

“ராகுல் நிதானத்தைக் காட்டிய நிலையில் மறுபுறம் பண்ட் அதிரடியாக விளையாடியது இங்கிலாந்து மீது அழுத்தத்தை உண்டாக்கியது. அந்த திடமான பார்ட்னரஷிப் உணவு இடைவெளிக்கு முன் ரன் அவுட்டால் உடைக்கப்பட்டது அனைத்தையும் மாற்றியது. அதற்குப் பின் நாம் சதத்தை பார்த்தாலும் அந்த ரன் அவுட் மனதளவில் விளையாடியது”

இதையும் படிங்க: இந்திய அணி செய்த இந்த 3 தவறுதான் லார்ட்ஸ் போட்டியில் தோற்க காரணம் – தினேஷ் கார்த்திக் கருத்து

“அதனாலேயே சதத்தைக் கடந்ததும் ராகுல் கவன சிதறலால் விக்கெட்டை இழந்தார். அப்போது புதிதாக 2 பேட்ஸ்மேன்கள் வந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தது எளிதாக இல்லை. கடைசியில் இந்தியா போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இதயத்தை உடைப்பதாக அமைந்தது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால் நாம் இந்நேரம் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலையில் இருப்போம். பும்ரா, சிராஜ் வெற்றிக்காக முடிந்தளவு போராடினார். இந்திய ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாக இருந்தது” எனக் கூறினார்.

- Advertisement -