ஆஷஸ் 2025/26 தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. அதனால் தொடர்ந்து 15வது வருடமாக சொந்த மண்ணில் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம் பஸ்பால் ஸ்டைலில் விளையாடி வெல்வோம் என்று சொல்லி தோல்வியை சந்தித்த இங்கிலாந்து 4வது போட்டியில் வென்றது.
அதனால் 15 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு விட்டது. முன்னதாக 2025ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அத்தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது ராகுல் – கில் நங்கூரமாக விளையாடி சரிவை சரி செய்து அவுட்டானார்கள்.
கேலி செய்த இங்கிலாந்து:
அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடி இந்தியாவை தூக்கி நிறுத்தி சதத்தை நெருங்கினார்கள். அப்போது இனிமேலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என்று இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நினைத்தார். அதனால் அவர்களுடைய சதத்தை தடுக்கலாம் என்ற நோக்கத்தில் அவர் ஆட்டத்தை முடித்துக்கொள்ள கை கொடுக்க வந்தார்.
ஆனால் அதை இந்திய கேப்டன் கில் ஏற்காததால் ஜடேஜாவும், சுந்தரும் தொடர்ந்து விளையாடினார்கள். அதனால் கடுப்பான இங்கிலாந்து அணி அவர்களை மிரட்டும் வகையில் கெஞ்சியது. குறிப்பாக பவுன்சர் பந்துகளால் மண்டையை தாக்குவேன் என்று ஜடேஜாவிடம் ஜோப்ரா ஆர்ச்சர் மிரட்டினார். மறுபுறம் விரைவில் சதமடிக்க ஏதுவாக கேப்டன் ஸ்டோக்ஸ் பகுதிநேர பவுலரான ஹாரி ப்ரூக்கிடம் பந்தைக் கொடுத்து இழிவாக நடந்து கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் திண்டாட்டம்:
அப்போது இவருக்கு எதிராகத்தான் சதமடிக்க விரும்புகிறீர்களா? என்று ஜடேஜாவிடம் பென் டக்கெட் கேலியாக பேசினார். அதையெல்லாம் காதில் வாங்காத ஜடேஜாவும் சுந்தரும் சதமடித்த பின் இந்தியா போட்டியில் முடித்துக் கொள்ளாத கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில் அன்றைய நாளில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கேலி செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இன்று ஆஸ்திரேலியாவில் திண்டாடுவதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து நாட்களிலும் டெஸ்ட் சதம் கிடைக்காது என்பதை உணர்ந்த ஜடேஜாவும் சுந்தரும் அதிலிருந்து வெளியேற மறுத்த போது அனைத்து இங்கிலாந்து வீரர்களும் கேலி செய்தனர். அவர்கள் அற்புதமாக விளையாடி 80 ரன்கள் குவித்து இங்கிலாந்து பவுலர்களை கடுப்பேற்றினார்கள்”
இதையும் படிங்க: அடிமை காலம் மலையேறிடுச்சு.. இந்தியாவின் ஐபிஎல்’லை நாங்க பார்க்க தடை செய்வோம்.. வங்கதேசம் அறிவிப்பு
“மேலும் கடைசி போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களை வெயிலில் நிற்க வைத்து சோர்வடைய வைக்க நினைத்தது சரியானது. ஆனால் அன்று அவர்களை கேலி செய்தவர்கள் இன்று ஆஸ்திரேலியாவில் தங்களது பேட்டின் நடுவில் துளை இருப்பதை மட்டுமே காண்கிறார்கள். கிரிக்கெட் ஒரு சிறந்த சமநிலைப்படுத்தி. ஆணவத்தை வேறுபடுத்திம் காட்டும் எவரும் அதை மிகவிரைவாக கற்றுக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.



