மீனவர் மகனா இவர்..! இவ்வளவு கஷ்டத்திலும் இத்தனை சாதனைகளா..! எப்படி சாத்தியம் ..! – யார் தெரியுமா..?

sunil
- Advertisement -

சுனில் கவாஸ்கர், இந்தியா கிரிக்கெட் அணியில் 1971-87 ஆண்டு காலகட்டத்தில் விளையாடிய ஒரு சிறப்பான வீரர். 1949 ஆம் ஆண்டு பிறந்த இவர், இன்று (ஜூலை 10) தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரானா இவரின் பிரத்யேக தொகுப்பு தான் இந்த பதிவு.

1971 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இவர் பின்னர் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை முதன் முதலாக கையில் இந்திய பெருமையில் இவருக்கும் பங்குண்டு.

தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிய டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஐசிசி யின் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் சுனில் கவாஸ்கர்.
sunilgawaskar
மும்பையில் பிறந்த கவாஸ்கர், இவர் பிறந்த போது, அவரது தாய்க்கு அருகில் ஒரு மீனவ பெண்ணும் பிரசவம் முடிந்து குழந்தையுடன் படுத்திருந்தார். ஆனால், கவாஸ்கரின் மாமாவிடம் குழந்தை ஒப்படைத்த போது குழந்தை மாறி போன விடயம் கவாஸ்கரின் காதில் உள்ள ஒரு அடையாளத்தின் மூலம் கவாஸ்கரின் மாமா அறிந்து கொண்டார்.

- Advertisement -

பின்னர் குழந்தை மாறியுள்ளது என மருத்துவர்களிடம் கூற, கவாஸ்கரை மீனவ பெண்ணிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்தது கவாஸ்கரை மாற்றி எடுத்து சென்ற அந்த மீனவ பெண்ணின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி பின்னர் குழந்தையாக இருந்த கவாஸ்கரை மீண்டும் திரும்ப பெற்று வந்தார்களாம்.
sunil-gavaskar
கவாஸ்கரின் மாமா வேறு யாரும் இல்லை அவரும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் தான். அவருடைய பெயர் மாதவ் மந்த்ரி, அவரது கவனிப்பில் தான் கவாஸ்கர் வளர்ந்து வந்தார். ஒரு வேலை கவாஸ்கரின் மாமா, கவாஸ்கர் குழந்தையாக இருந்த போது அவரை தவறவிட்டிருந்தால், இன்று ஒரு மீனவ குடும்பத்தில் தான் வளர்ந்திருப்பார் கவாஸ்கர்.

Advertisement