கேஎல் ராகுலை விமர்சிக்கவும் தேவையில்லை நீக்கவும் தேவையில்லை – 2 முன்னாள் வீரர்கள் பெரிய ஆதரவு

KL-Rahul
- Advertisement -

ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா தனது 2-வது லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்டு 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் வென்றிருந்த இந்தியா லீக் சுற்றில் 2 வெற்றிகளை பதிவு செய்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த தொடரில் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளிலும் முறையே 0, 36 என சொற்ப ரன்களில் அவுட்டானது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த 2014இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் ஆரம்ப காலங்களில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயம் காரணமாக நிலையான இடத்தை பிடிக்க தடுமாறினார்.

KL Rahul

- Advertisement -

அதன்பின் 2019 உலகக்கோப்பையில் காயத்தால் வெளியேறிய ஷிகர் தவானுக்கு பதில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்று அவரை விட அபாரமாக செயல்பட்ட இவர் அந்த இடத்தை தனதாக்கிக் கொண்டு சமீப காலங்களில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் முதன்மை முக்கிய தொடக்க வீரராக உருவெடுத்துள்ளார். அப்படியே ஐபிஎல் தொடரிலும் 400, 500 போன்ற பெரிய ரன்களை எடுத்து இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக உருவெடுத்த இவர் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் 2 மாதங்கள் அணியிலிருந்து விலகினார்.

கடுமையான விமர்சனம்:
அதனால் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களை தவறவிட்ட அவர் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கடைசி நேரத்தில் குணமடைந்ததால் தவானுக்கு பதில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதில் 1, 30 என சுமாரான ரன்களை எடுத்த அவர் இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தார். அதைவிட பலவீனமான ஹாங்காங்க்கு எதிரான 2வது போட்டியில் 12 ஓவர்கள் வரை மெதுவாகவே பேட்டிங் செய்த அவர் 39 பந்துகளில் 36 ரன்களை எடுத்து இந்தியா 200 ரன்களை தொடமுடியாத அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.

KL Rahul

மேலும் சமீப காலங்களில் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தோற்றாலும் பரவாயில்லை பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் விளையாடும் இவர் இதேபோல் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். அதை புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்கும் ரசிகர்கள் இவரை அணியிலிருந்து நீக்கி தீபக் ஹூடா போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
இந்நிலையில் ஏற்கனவே நல்ல பார்மில் இருந்த கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளதால் மீண்டும் பழைய பார்மை கண்டெடுக்க இது போன்ற சில போட்டிகள் அவகாசம் தேவைப்படுவதாக முன்னாள் ஜாம்பவான் இந்த வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அவரை நீக்குவதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ அவசியமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Sunil-gavaskar

“கேஎல் ராகுல் கிளாஸ் நிறைந்தவர் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த சில வருடங்களாக இந்தியாவுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள அவருக்கு இதர முக்கிய வீரர்களுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான வாய்ப்புகளை ஏன் வழங்கக்கூடாது? மேலும் அவர் உங்களுடைய துணை கேப்டனாகவும் இருக்கிறார். எனவே நீங்கள் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கலாம். ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவார் என்பதை நாம் அறிவோம். தற்போது காயத்திலிருந்து குணமடைந்தது வந்துள்ளதால் அந்த முழுமையான பழைய பார்ம் அவரிடமில்லை. ஆனால் அவர் பார்முக்கு வந்துவிட்டால் அது எதிரணிக்கு பயத்தை கொடுக்கும் வகையில் அமையும்” என்று கூறினார்.

அதே போல் காயத்திலிருந்து குணமடைந்ததுள்ள வந்துள்ள கேஎல் ராகுலுக்கு இந்த 36 ரன்கள் பழைய பார்மையும் தன்னம்பிக்கையும் மீட்டெடுக்க உதவும் என்று மற்றொரு முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

Irfan-pathan

“இந்தியாவைப் பொருத்தவரை நிறைய நேர்மறையான அம்சங்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் அந்த 36 ரன்களால் மிகப்பெரிய தன்னம்பிக்கை பெறுவார். ஆரம்பத்தில் அவர் தடுமாறினாலும் இறுதி வரை சேர்த்த 36 ரன்கள் நிச்சயமாக விரைவில் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதற்கான தன்னம்பிக்கையை அவருக்கு கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement