2008 சேவாக் மாதிரி அவர் ஆடனும்.. கூடவே இந்த திட்டத்தை செஞ்சா இந்தியா ஜெய்க்கலாம்.. கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar 2
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றிக்கு போராடி வருகிறது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 274 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியா நித்திஷ் ரெட்டி 114, வாஷிங்டன் சுந்தர் 50, ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்த உதவியுடன் 369 ரன்கள் குவித்து அசத்தியது.

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா நான்காவது நாள் முடிவில் 333 ரன்களை முன்னிலையாக பெற்றுள்ளது. அதனால் கடைசி நாளில் இந்தியா 333+ ரன்கள் இலக்கை சேசிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் மெல்போர்ன் மைதானத்தில் 332க்கும் மேல் எந்த அணியும் வெற்றிகரமாக இலக்கை சேசிங் செய்தது இல்லை. அதனால் இந்தப் போட்டியில் இந்தியா வெல்வது மிகவும் கடினமாகவும் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவும் காணப்படுகிறது.

- Advertisement -

சேவாக் மாதிரி:

இந்நிலையில் 2008 சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 387 ரன்களை 4வது நாள் மாலையில் துவங்கி 5வது நாளில் வெற்றிகரமாக சேசிங் செய்ததாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதற்கு வீரேந்திர சேவாக் சரவெடியாக 83 (68) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். அதே போன்ற ஆட்டத்தை 2023 உலகக் கோப்பையில் விளையாடியது போல் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது கடினம் என்றாலும் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மணி நேரமும் கவனம் செலுத்தி இந்தியா விளையாடினால் வெற்றி பெறலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிராக 2008இல் இந்தியா 387 ரன்களை சேசிங் செய்வதற்கு வீரேந்திர சேவாக் கொடுத்ததைப் போன்ற அற்புதமான துவக்கத்தை கொடுக்க வேண்டிய நிலையில் ரோகித் சர்மா இருக்கிறார்”

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:

“4வது நாளில் அவர் கொடுத்த அதிரடியான துவக்கம் கிடையாது. ஐந்தாவது நாள் காலையில் சேவாக் கொடுத்த அதிரடியான துவக்கம் தான் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாட உதவியது. அந்த வகையிலான ஒரு நல்ல துவக்கம் முற்றிலும் கடவுள் அனுப்பியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதே சமயம் 330 உட்பட ஆஸ்திரேலியா என்ன இலக்கை நிர்ணயிப்பார்கள் என்பதை பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பதே வெற்றிக்கான சாவியாகும்”

இதையும் படிங்க: பும்ராவை பற்றி வர்ணிக்க வார்த்தையில்ல.. அந்த 3 வெ.இ ஜாம்பவான்களை மிஞ்சி கலக்குறாரு.. கில்கிறிஸ்ட் பாராட்டு

“மாறாக அந்த இலக்கை இந்திய அணியினர் செஷன் அடிப்படையில் கூட இல்லாமல் தண்ணீர் இடைவெளி அடிப்படையில் உடைக்க வேண்டும். அந்த வகையில் இந்திய அணியினர் ஒவ்வொரு மணி நேரத்திற்கு தகுந்தார் போல் திட்டங்களை வகுக்க வேண்டும். அதில் ஆஸ்திரேலியா என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement