சதத்தை 4 ரன்னில் தவறவிட்டாலும் நான் இந்த விடயத்தை நினைத்து சந்தோஷமா தான் இருக்கேன் – சுந்தர் பேட்டி

Sundar-2

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் குவிக்க அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 365 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பேட்டிங்கில் அசத்திய 2 இளம் இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி அடித்த ரன்களையாவது எட்டுமா என்று எதிர்பார்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் இங்கிலாந்து பவுலர்களை எளிதாக கையாண்டு 101 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதற்கடுத்து பின்வரிசையில் இருக்கும் பவுலர்களை வைத்து தான் ரன்களை சேகரிக்க வேண்டும் என்றாலும் சிறப்பாக விளையாடி 96 ரன்கள் வரை சுந்தர் சென்றார். ஏற்கனவே சென்னை டெஸ்ட் போட்டியின் போது 85 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த அவர் இந்த போட்டியிலும் அடுத்தடுத்து மூன்று பவுலர்கள் ஆட்டமிழக்க 4 ரன்களில் சதத்தை எடுக்கும் அற்புதமான வாய்ப்பை இந்த முறையும் தவறவிட்டார்.

sundar 2

அவர் சதத்தை தவறவிட்ட ரசிகர்களுக்கு வருத்தமாக அமைந்தாலும் போட்டி முடிந்து பேட்டியளித்த சுந்தர் அதைப் பற்றி கொஞ்சமும் வருத்தம் இல்லாமல் பெருந்தன்மையுடன் பேட்டியளித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சொந்த மண்ணில் தொடரை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டது எனக்கு சிறிதளவு கூட கவலை இல்லை ஏனெனில் எனக்கான நேரம் வரும்போது நான் சதம் அடிக்க போகிறேன்.

- Advertisement -

Sundar 1

இப்போதைக்கு இந்திய அணியின் வெற்றியில் எனது பங்கும் உள்ளது என்ற விடயத்தை நினைக்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு இலகுவாக இருந்தது. ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement