இவர்கள் இருவர் இருக்கும்வரை என்னை ஒன்னும் பண்ணமுடியாது – கெத்தாக பேசிய வாஷிங்க்டன் சுந்தர்

sundar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் திகழ்கிறார். தற்போது 20 வயதே ஆன வாஷிங்டன் சுந்தர் தனது 17 ஆவது வயதிலேயே இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஒரு ஒருநாள் போட்டியில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sundar

- Advertisement -

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் t20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் சுந்தர் தனது பவுலிங்கில் பவர்பிளே ஓவர்களில் அசத்துவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவர் தொடர்ந்து டி20 அணியின் வாய்ப்பினை பெற்றுவருகிறார். மேலும் அவர்மீது கோலி வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக துவக்க ஓவர்களில் தொடர்ந்து சுந்தரை பந்துவீச வைத்து வருகிறார். அதே நேரத்தில் சுந்தரும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வீரர்களும் வீட்டில் இருக்கும் நிலையில் சுந்தர் தனது பந்து வீச்சில் பல புதுமைகளைப் புகுத்த காத்திருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் இதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் தனது சுழற்பந்து வீச்சு பற்றி குறிப்பிடுகையில் : சுழற்பந்து வீச்சே எனது பலம். அந்த பலத்தில் சற்று கூடுதலாக தற்போது நான் வேகத்தை கூட்டினேன். பொதுவாக 92 93 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன்.

தவிர பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதை நான் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆடுகளத்தில் பிட்ச் ஆகும் போது வேகம் குறையாமல் இருக்கும். மேலும் அதே வேகத்துடன் செல்லும் போது பேட்ஸ்மேன்களுக்கு அது ஆச்சரியமாக இருக்கும். எனது பந்தை எதிர் கொள்ளும் பேட்ஸ்மேன்கள் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறேன். இந்த செயல்பாட்டை நான் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது செயல்படுத்தி உள்ளேன். அப்பொழுது இதேபோன்ற பந்தில் லெவிஸ் ஸ்டம்பிங் ஆனார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் நியூஸிலாந்து அணிக்கு எதிராகவும் இந்த ஃபார்முலாவை நான் பயன்படுத்தியுள்ளேன். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகிய இருவர் மட்டுமே என்று நான் கூறுவேன். ஏனெனில் எனது பந்துவீச்சில் ஒவ்வொரு செயல்பாட்டையும் கவனிக்கும் அவர்கள் எனது பந்துவீச்சை முன்னேற்றம் குறித்த பல யோசனைகளை தருவார்கள். அவர்களின் கொடுக்கும் யோசனைகளை நான் போட்டிகளின்போது பரிசோதித்து பார்ப்பேன்.

Bharath Arun

மேலும் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் நாங்கள் மூவரும் அந்த போட்டியில் நான் பந்து வீசிய விதம் குறித்தும் எனது செயல்பாடு குறித்தும் விவாதிப்போம். அவ்வாறு விவாதிக்கப்படும் போது ஏற்படும் குறைகளை நீக்கி நான் அடுத்த போட்டிக்கு தயாராக இது உதவும். தற்போது டி20 உலக கோப்பை எதிர் வருவதால் நான் எனது பந்துவீச்சில் சில மாற்றங்களை கொண்டு வந்து அதன் மூலம் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறேன் என்று வாசிங்டன் சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement