அஷ்வினுக்கு அடுத்து ஒருநாள் அணியில் இடம்பிடித்து சாதிக்க உள்ள தமிழர் – விவரம் இதோ

sundar1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாளை மோத இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை பிற்பகல் 1 30 மணிக்கு துவங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் இந்திய வீரர்கள் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ஆல்-ரவுண்டராக ஷிவம் துபே வரும் போட்டிகளில் சாதிப்பார் என்று பேசிய அவர் அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தர் குறித்தும் பேசினார். அவர் பேசுகையில் : வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சாளராக டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்து அதை சரியாக பயன்படுத்தி உள்ளார்.

மேலும் தற்போது முதன்மை ஸ்பின்னராக ஆடிவரும் அவரது முதிர்ச்சி விரைவில் அவரை ஒரு நாள் அணிக்கு எடுத்துச்செல்லும் மேலும் தனக்கான இடத்தை அவர் ஒருநாள் போட்டிகளிலும் பிடிப்பார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சரியாக பயன்படுத்தி பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படும் சுந்தர் எதிர்காலத்தில் இந்திய ஒருநாள் அணியின் நிச்சயம் இருப்பார் என்றும் தெரிவித்தார்.

Sundar
தற்போது டி20 தொடரில் மட்டும் ஆடிவரும் சுந்தர் தமிழக அணிக்காக சையது முஷ்டாக் அலி தொடரில் பல போட்டிகளில் அபாரமாக ஆடி அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அணிக்காக பலமுறை அவர் பேட்டிங்கிலும் தன்னை சிறந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ளார். இதுவரை சர்வதேச போட்டிகளில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் சுந்தர் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவார்.

sundar

- Advertisement -

மேலும் ஒரு நாள் அணிக்கு விரைவில் தேர்வுசெய்யப்படுவார் என்பதே அனைவரது நம்பிக்கையாக உள்ளது. அஷ்வினுக்கு அடுத்து தமிழக வீரர்கள் பலரும் இந்திய அணியில் இடம்பிடித்தாலும் தொடர்ந்து ஆடுவது கிடையாது. எனவே சுந்தர் நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது.