இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடமாட்டார். அதன் காரணம் இதுதான் – விவரம் இதோ

sundar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று முதலாவது டி20 போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

sundar

- Advertisement -

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஆடும் லெவனில் அவளுக்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரியவந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2020 டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்ய நிர்வாகம் முன்வந்துள்ளது.

அதன்படி சுந்தர் ஒரு ஆல்ரவுண்டராக அறியப்பட்டாலும் அவர் மாற்று வீரராக இந்தியனில் நீடிக்கிறார். அவ்வப்போது இந்திய அணிக்கு வந்துசெல்லும் சுந்தர் நிலையான வாய்ப்பை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் யாதெனில் க்ருனால் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும், ராகுல் சாகர் போன்ற இளமையான வீரர்களும் அணியில் இருப்பதே காரணம்.

sundar1

நிதாஸ் டிராபியில் சுந்தர் அசத்தலாக செயல்பட்டு இருந்தாலும் அதற்கு பின்பு அவர் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு இப்போதுதான் 19 வயது ஆகிறது என்பதால் வாய்ப்புக்காக அவர் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க தான் வேண்டும். இவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் சுந்தர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை என்றால் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மூன்றாவது போட்டியில் சுந்தருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்றும் கருதப்படுவது.

Advertisement