பேட்டிங்கில் கை கொடுத்தாலும் அணியில் சேர்த்த விஷயத்தையே மறந்துட்டாரு – சிக்கலில் தமிழக வீரர்

Sundar-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெரும் ஆரவாரத்துடன் நமது சேப்பாக்கத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் சேப்பாக் ஸ்டேடியத்தின் பிட்ச் அமைப்பானது முதல் ஒன்றரை நாட்கள் பேட்டிங் செய்ய ஏதுவானதாகவும் பின்பு போக போக பவுலர்களுக்கு ஏற்ப பவுலிங் பிட்ச் போன்று மாறும் தன்மை உடையது , அதிலும் சுழல் பவுலர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.

Burns

- Advertisement -

இதை கோலி கருத்தில் கொண்டு மூன்று சுழற் பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்தார். அதிலும் உள்ளூர் வீரர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மீதே அனைவரது கண்களும் இருந்தது.
நினைத்தது போல டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய பந்து வீச்சாளர்களை சரமாரியாக பதம் பார்த்தனர். அனைவரும் எதிர்பார்த்த நமது அஸ்வின் மற்றும் சுந்தர் ஜோடியில் அஸ்வின் மட்டுமே சிறப்பாக ஆடினார்.

மறுமுனையில் பவுலிங்கில் கைகொடுப்பார் என நம்பி உள்ளெடுத்த சுந்தர் பந்தை சரியாக சுழல கஷட்பட்டார்.பந்து சரியான லைனில் பயணிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸிலும் இதை தவறை சுந்தர் மறுபடியும் பன்னியது வியப்பாக உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒருப்பக்கம் 6 விக்கெடுகளை எடுத்து அஸ்வின் கலக்க மறுபக்கம் இவரோ விக்கெட் ஏதும் எடுக்காதது வியப்பாகவே உள்ளது.

sundar 1

பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பி எடுக்கப்பட்ட வாஷிங்கடன் சுந்தர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் கை கொடுத்து நம்மை ஆச்சிரியத்தை ஏற்படுத்தினாலும், பந்து வீச்சில் ஒரு விக்கெட்டு கூட எடுக்காமல் சொதப்பியது நமது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

sundar 2

ஒரு சுழற்பந்து வீச்சாளராக அணியில் தேர்வு செய்யப்பட்ட சுந்தர் முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தவில்லை. மேலும் இரண்டாவது இன்னிங்சிலும் 1 ஓவர் மட்டுமே வீசினார். இதனால் அடுத்த போட்டிக்கான அவரது தேர்வு கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் சுந்தர் பேட்டிங்கில் சற்று கைகொடுப்பதே ஆறுதலான விஷயம். ஏற்கனவே அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் வாய்ப்பு காத்திருப்பதால் சுந்தர் பவுலிங்கில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதே நமது கருத்து.

Advertisement