சுந்தரிடம் உள்ள இந்த திறமை இந்த ஆஸ்திரேலிய தொடரில் வெளிப்பட்டது – தந்தை உற்சாக பேட்டி

Sundar-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த வரும் வாஷிங்டன் சுந்தர் 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்து வருகிறார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது அவரது மிகப்பெரிய இலக்காக இருந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நெட் பவுலராக இருந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக பந்து வீசியது மட்டுமின்றி பேட்டிங்கில் அசத்தினார்.

Sundar-1

இந்நிலையில் அவரது தந்தை அவர் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவான் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். என்னை பொருத்தவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுந்தர் விரைவிலேயே அறிமுகம் ஆகி விட்டான். ஆனால் டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடுவான் நினைத்திருந்தேன். அதேபோல இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்ற அவனை டெஸ்ட் தொடரிலும் அணியில் இருக்குமாறு கூறினார்கள்.

அப்போது நான் அவனிடம் நீ நிச்சயம் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவாய் என்று கூறி இருந்தேன். ஆனால் அவன் “அப்பா நீங்கள் சொல்வது வாய்ப்பே இல்லை” என்று என்னிடம் கூறினான். ஆனால் பொங்கல் தினத்தன்று எனக்கு போன் செய்து நான் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறேன் என்று கூறினான். நல்லா விளையாடு என்பதை மட்டும் நான் கூறினேன். மேலும் நாங்கள் அந்த டெஸ்ட் போட்டியை டிவியின் முன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது ஸ்மித்தின் விக்கெட்டை முதல் நாளன்று வீழ்த்தியபோது ஆரவாரம் செய்தோம்.

sundar 2

அதே போன்று அவன் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடினான். இதுதான் அவனது அசல் ஆட்டம் டி20 போட்டிகள் வந்தவுடன் முதலில் இருந்தே அடித்து ஆட வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அதனால் அவனுடைய பேட்டிங் திறன் பெரிதாக வெளியில் தெரியாமல் போனது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தான் ஒரு பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார். பேட்டிங்கில் ஓப்பனிங் செய்யக்கூடிய அளவிற்கு திறன் படைத்தவன்.

- Advertisement -

sundar 3

எப்போதும் பந்துவீச்சாளராக மட்டுமே பார்க்கப்பட்ட அவனுடைய உண்மையான பேட்டிங் திறன் இந்த தொடரில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சுந்தர் ஒரு கிரிக்கெட் வீரராக வலம் வருவான் என்று அவரது தந்தை கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் சரி, இரண்டாவது இன்னிங்சிலும் சரி இந்திய அணியின் முக்கிய காரணமாக இருந்த சுந்தர் பவுலிங்கில் அசத்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் நிரூபித்துள்ளார். இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கும் இவரது தனிப்பட்ட ஆட்டத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.