சிறப்பாக விளையாடினாலும் வாஷிங்க்டன் சுந்தர் இதை செய்யாதது எனக்கு ஏமாற்றம் தான் – அவரது தந்தை பேட்டி

Sundar-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது காபா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்கள் ஆன வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பவுலராக மூன்று அற்புதமான விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் அரை சதம் விளாசி சுந்தர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான துவக்கத்தை அளித்தார். அவரின் இந்த சிறப்பான செயல்பாடு அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

nattu 1

- Advertisement -

அது மட்டுமின்றி பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள், நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் சுந்தரின் ஆட்டம் முதல் டெஸ்ட் போட்டி போன்று இல்லை என்றும் அவர் ஒரு தரமான ஆட்டத்தை முதிர்ச்சியான வகையில் அளித்திருக்கிறார் என்றும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வாஷிங்டன் ஆட்டம் தனக்கு ஏமாற்றத்தை தந்ததாக அவரது தந்தை பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : சுந்தருக்கு விளையாட எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று நான் அவனிடம் சொல்வது எனது வழக்கம். அவனும் அதை செய்வதாக சொல்லி இருந்தான். ஆனால் அவன் இந்த பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்காதது எனக்கு ஏமாற்றம்தான். சிராஜ் கிரீசுக்கு வந்ததும் அவள் பெரிய ஷாட்டை அடித்து இருக்க வேண்டும்.

Thakur

அதைச் செய்யக் கூடிய திறமை அவரிடம் உள்ளது. ஏனெனில் அவன் தொடக்க ஆட்டக்காரராக பஸ்ட் டிவிஷன் போட்டிகளில் இளம் வயதிலேயே சதம் விளாசியுள்ளார். எனவே நன்றாக அடிக்கும் திறமை இருந்தும் அவன் அதை செய்யாதது எனக்கு வருத்தமளிக்கிறது. அரைசதத்தோடு நிறுத்தாமல் நிச்சயம் அவர் சதம் அடித்து இருக்க வேண்டும் என்றும் இதனால் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர் தந்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

sundar 2

இருப்பினும் வாஷிங்டன் சுந்தரின் அபாரமான ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது என்றால் அது மிகை அல்ல. மேலும் இரண்டாவது இன்னிங்சிலும் கூட அபாயகரமான வார்னரை அவர் விரைவில் எல்பிடபிள்யூ மூலம் அவுட்டாக்கி வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement