ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் செய்யாததை செய்து காட்டிய டெய்ல் எண்டர் ஜோடி – விவரம் இதோ

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு முடித்துக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாளில் 336 ரன்கள் குவித்து முடித்துக்கொண்டது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது.

Thakur

- Advertisement -

இந்த போட்டியின் துவக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் விரைவிலேயே விக்கெட்டை இழக்க இவ்வளவு பெரிய ரன்கள் இந்திய அணிக்கு வர காரணமாக இருந்தவர்கள் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தான் ஏனெனில் ரோகித் சர்மா, கில், புஜாரா, ரகானே, அகர்வால் என முன்னணி வீரர்கள் அனைவரும் 186 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி குறைவான ஸ்கோர் தான் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் கூட்டணி அமைத்த சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் ஜோடியாக 123 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வலுவான நம்பிக்கை அளித்தனர். இதனால் இந்த போட்டி முடிந்து இவர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

sundar 1

இந்நிலையில் 7வது விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி 123 ரன்களை சேர்த்தது பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையையும் இந்த ஜோடி அடைந்துள்ளது. இந்த தொடர் முழுவதுமே இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் ரன்களை குவிக்காமல் இருந்திருந்தாலும் சிறப்பாகவே ஆடி வருகின்றனர். ஆனால் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போதும் டெய்ல் எண்டர்கள் என்று அழைக்கப்படும் இந்த பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்வது என்பது எப்போதுமே ஒரு அணிக்கு பலம் தரக்கூடியது தான்.

sundar 3

அந்த வகையில் இந்திய அணியின் வீரர்களான சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. அது மட்டுமின்றி பல தரப்பட்ட இடங்களில் இருந்தும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிகிறது. தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் அடித்தது மட்டுமின்றி முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சுந்தர் அபாரமான துவக்கத்தை கண்டு உள்ளார் எனவும் ரசிகர்கள் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement