மைதானத்தில் நுழைய தடை இருந்தால் என்ன ? மலை உச்சியின் மீது ஏறி அம்மக்களப்படுத்திய – சச்சின் ரசிகர் சுதிர்

Sudhir
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் பெருகிவரும் கொரோனோ வைரஸ் காரணமாக ஒருநாள் போட்டிகளில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதன்காரணமாக ரசிகர்களின் இன்றி பூட்டிய மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் சச்சினின் ரசிகரான சுதிர் இந்த போட்டியை புனே மைதானத்தின் அருகில் உள்ள ஒரு மலையின் மீது ஏறி நின்று இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்த படி கொடி அசைத்துள்ளார். அவரின் இந்த செயல்பாடு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

- Advertisement -

சச்சினின் தீவிர ரசிகரான இவர் இந்தியாவில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் தவறாமல் பங்கு பெறக் கூடியவர். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கூட இவர் பல்வேறு ஸ்பான்சர்களின் மூலம் நேரில் சென்று இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து மைதானத்தில் தேசியக் கொடியை அவர் மைதானத்தில் இருப்பார்.

Sudhir 1

இந்நிலையில் தற்போது புனேவில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான மைதானத்தில் இவருக்கு அனுமதி இல்லை என்பதால் அருகில் உள்ள ஒரு மலையின் மீது ஏறி அங்கு நின்றபடி கொடியசைத்து சங்கு ஊதி இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தார். உடம்பில் மூவர்ண கொடியை வரைந்து முதுகில் சச்சின் பெயரை எழுதி இருக்கும் இவரை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது அந்த அளவிற்கு ரசிகர்களிடம் பரிச்சயமான இந்த ரசிகர் சுதிர்.

sudhir 2

தற்போது இந்திய அணியை ஆதரவு செய்து மலை உச்சியின் மீது இருந்து ஆதரவு தெரிவித்த இவர் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கிரிக்கெட்டின் மீது தீவிர பக்தியுடன் இருக்கும் இவரது இந்த செயல் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement