இனி சப்ஸ்டிட்யூட் வீரரும் பேட்டிங், பௌலிங் செய்யலாம் – மாறியது ஐசிசி ரூல்

Jadeja
- Advertisement -

சப்ஸ்டிட்யூட் வீரர்கள் வெறும் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு விதி இது வரை இருந்தது. ஆனால் அந்த விதி இப்போது தகர்த்தப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் சமயத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக வரும் சப்ஸ்டிட்யூட் வீரர் இனி பேட்டிங், பௌலிங்கும் செய்யலாம் என்று ஐசிசி விதிகளில் மாற்றம் செய்துள்ளது. வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐ.சி.சி இந்த முடிவை எடுத்துள்ளது. ஐ.சி.சி-யின் முடிவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

icc

- Advertisement -

 

அதே போல ஒரு அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அந்த அணியின் கேப்டனுக்கு ஓர் இரு போட்டிகளில் தடை விதிக்கும் முறை இதுவரை இருந்து வந்தது. இந்த தடையையும் தற்போது ஐசிசி நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக இனி எந்த அணி மெதுவாக பந்து வீசுகிறதோ அந்த அணியின் வீரர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தடை எதுவும் இல்லை என்று ஐசிசி கூறியுள்ளது.

வரும் ஒன்றாம் தேதி முதல் இந்த விதி நடைமுறைக்கும் வரும். 1 ஆம் தேதி அன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டி தான் இந்த விதிகளோடு நடக்கக்கூடிய முதல் போட்டியாக இருக்கும்.

Advertisement