எல்லாமே ஒரு நொடியில மாறிடுச்சு. இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறிய பிராடு – உருக்கமான பதிவு

Broad
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. அதன்பின்னர் தற்போது (ஆகஸ்ட் 12) இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் எஞ்சியுள்ள 4 போட்டிகள் அதாவது இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டதாவது : “விஷயங்கள் சீக்கிரமாகவே மாறிவிட்டன” பயிற்சிக்கு முன்னர் நான் வாரம் அப் செய்துகொண்டிருக்கும்போது ஒரு தடையை தாண்டினேன் அவ்வாறு தாண்டிய பின்னர் காலை கீழே வைக்கும் போது என்னுடைய வலது காலில் காயம் ஏற்பட்டதை உணர்ந்தேன். கால் வழுக்கியதும் எனக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.

பிறகு ஸ்கேன் செய்து பார்க்கும்போது வலதுகாலின் தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா தொடரை முழுவதுமாக நான் தவற விடுகிறேன். இதற்கு அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் அணிக்கு திரும்ப போகஸ் செய்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விலகல் காரணமாக அணியில் ஷாகிப் முகமத் சேர்க்கப்பட்டுள்ளார்.

mahmood

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ஷாகிப் முகமத் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்ததால் இந்த டெஸ்ட் தொடரில் அவர் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement