- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்த – ஸ்டூவர்ட் பிராடு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்துள்ளனர். இதன் காரணமாக இந்த தொடரில் வெற்றி தோல்வியின்றி இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

சிறந்த பிளேயிங் லெவனை தேர்வுசெய்த ஸ்டூவர்ட் பிராடு :

மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 21 சதங்களும், 50 அரை சதங்களும் என 7000-திற்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி பந்துவீச்சில் 1860.4 ஓவர்கள் வீசப்பட்டு 172 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இப்படி இந்த தொடரானது ரசிகர்களுக்கு சற்றும் சுவாரசியத்திற்கு குறைவின்றி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து பெஸ்ட் பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடு தேர்வுசெய்து அறிவித்துள்ளார். அந்த வகையில் அவர் தேர்வு செய்துள்ள இந்த 11 பேர் கொண்ட அணியில் 6 இந்திய வீரர்களுக்கும், 5 இங்கிலாந்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அவர் தேர்வு செய்துள்ள இந்த பட்டியலில் : துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தில் ஆலி போப்பும், நான்காவது இடத்தில் ஜோ ரூட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐந்தாவது இடத்தில் ஹாரி புரூக் மற்றும் ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஏழாவது இடத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், எட்டாவது இடத்தில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் ஸ்டூவர்ட் பிராடு தேர்வு செய்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் சிறந்த பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இங்கிலாந்தில் அவர் இல்லாமையே சுப்மன் கில் இந்திய அணி தொடரை சமன் செஞ்சது பெரிய சாதனை.. மான்டி பனேசர்

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) ஆலி போப், 4) ஜோ ரூட், 5) ஹாரி புரூக், 6) பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), 7) ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), 8) வாஷிங்டன் சுந்தர், 9) ஜோப்ரா ஆர்ச்சர், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

- Advertisement -