போதை ஆட்டம்..! ராணுவ வீரர் தாக்குதல்.! அதிர்ச்சி முடிவை எடுத்தாரா ஸ்டோக்ஸ்..?

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டராக வலம்வந்து கொண்டிருக்கும் ஸ்டோக்ஸ் இந்திய அணியுடனான மீதமுள்ள போட்டிகள் அதாவது தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நைட் கிளப்பில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய வழக்கு இப்போது நடந்து கொண்டு இருக்கிறது அந்த விசாரணையில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை

stokes

வழக்கு இன்னும் முடியாத நிலையில் வரும் சனிக்கிழமை 3வது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது அந்த போட்டியில் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் அவர் இந்த தொடரிலிருந்து வெளியேறவே அவருக்கு வாய்ப்புள்ளது என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து வீரர்கள் இது போன்று போதையில் தகராறு செய்வது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே இங்கிலாந்து அணியை சேர்ந்த முன்னாள் வீரர் பிளிண்டாப் இவரும் போதையில் தகராறு செய்து கோர்ட் படி ஏறியுள்ளார் இங்கிலாந்து அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய இவரும் ஒரு ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடதக்கதுஒரு வேளை இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை இங்கிலாந்து வாரியம் தற்காலிக தடை அளிக்கவும் வாய்ப்புள்ளது

stokes 2

ஸ்டோக்ஸ் பதிலாக ஆடிவரும் வோக்ஸ் 2வது டெஸ்டில் சதமடித்ததால் அணிக்கு ஸ்டோக்ஸ் இல்லாதது ஒரு பின்னடைவாக இருக்காது இருந்தாலும் ஸ்டோக்ஸ் போன்ற திறமையான ஆல்ரவுண்டரை அணி நிர்வாகம் வீண் அடிக்காது எனவும் நாம் நம்பலாம்.