இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
முழுவதும் பேட்டிங்க்கு சாதகமாக இந்த மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் இன்று இந்திய அணி பவுலர்களை மிகவும் நோகடித்து ரன்களை சேர்த்தனர். முதல் நாளை விட என்று சற்று வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர்கள் ரன்களை குவித்து வந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் 175வது ஓவரில் இங்கிலாந்து அணியின் வீரர் பெஸ் வாஷிங்டன் சுந்தர் வீசிய ஒரு பந்தை லெக் சைடில் காற்றில் அடித்தார்.
இன்சைட் ஆன அந்த பந்து நேராக மிட் விக்கெட் திசையில் இருந்த ரோஹித்தின் கைகளுக்கு சென்றது. எளிதாக வந்த கேட்சை ரோகித் சர்மா கோட்டை விட்டார். இவ்வளவு எளிதான கேட்ச் விட்டது இந்திய அணி வீரர்களை சற்று அதிர்ச்சி அடைய வைத்தது. அதே வேளையில் இங்கிலாந்து அணியின் ஓய்வு அறையில் இருந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரோஹித் இந்த கேட்ச்யை தவற விட்டதை பார்த்து “ஓவ் வாட்” என்பது போல வாயை பிளந்தபடி ஆச்சரியமாக பார்த்தார்.
Rohit Sharma trying his best not to bat Today. #INDvsENG
Ben stokes reaction 😂 . Tactical drop . pic.twitter.com/hZjD8UAeX6— ✨Suraj✨ (@DEMON_KHILADI) February 6, 2021
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 555 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி உள்ள நிலையில் பெஸ் 28 ரன்களுடனும், லீச் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் பும்ரா, இசாந்த் சர்மா, அஸ்வின், நதீம் ஆகிய நால்வரும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இந்திய அணியின் வீரர்கள் இதுபோன்ற பீல்டிங் தவறுகளை செய்து வருவது சற்று வருத்தமான விடயம் தான். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற விக்கெட் வாய்ப்புகள் எப்போதாவது தான் கிடைக்கும். இப்படி கைக்கு வரும் கேட்சை தவறவிடுவது சற்றே வருத்தப்பட வேண்டிய விடயம் தான் என்பதில் சந்தேகமில்லை.