தோனி உலகக்கோப்பை போட்டில ஜெயிக்கிற எண்ணத்தோட விளையாடவே இல்ல – குண்டை தூக்கி போட்ட ஸ்டோக்ஸ்

Jadhav
- Advertisement -

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சர்ச்சைக்குரிய வகையில் கோப்பையை கைப்பற்றியது . இந்த தொடரின் 38 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இந்திய அணி இந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. லீக் சுற்றில் இந்திய அணி பெற்ற ஒரே தோல்வி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்த தோல்வியை இந்திய வீரர்கள் வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று பென் ஸ்டோக்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் எழுதியுள்ள ‘ஆன் பயர்’ என்ற புத்தகத்தில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பற்றி பேசியுள்ளார். இதில் குறிப்பாக அந்த குறிப்பிட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அந்த புத்தகத்தில் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளதாவது…

11 ஓவர்களில் 112 ரன்கள் தேவை என்ற போது தோனி களமிறங்கினார். அப்போது சிக்சர்கள் விளாசுவதை விட ஒரு ரன் எடுப்பதையே குறிப்பாக கொண்டிருந்தார். ஆட்டத்தின் கடைசி 2 பந்துகளில் மீதம் இருந்த போதும் சிங்கிள் ரன் எடுத்தார். தோனி மற்றும் கேதர் ஜாதவ் கடைசிவரை ஆடினார்கள். அவர்கள் இருவரிடமும் வெற்றிக்கான நோக்கம் சிறிதளவும் இல்லை.

Dhoni 1

அவர்கள் போராடவில்லை. தோனி விளையாடுவதை பார்த்து நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அவர்கள் விளையாடிய விதத்தினை பார்த்தபோது ரன் ரேட்டில் மட்டுமே அவர் கவனம் செலுத்துகிறார் என்று தெரிந்தது. மேலும் இலக்கிற்கு எவ்வளவு அருகில் வர முடியுமோ அவ்வளவு அருகில் வர வேண்டும். விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் இந்திய அணியின் ரன் ரேட் நன்றாக இருக்கும். இதற்காகத்தான் ஆடினார்கள்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பேட்டிங் சற்று மர்மமாக இருந்தது. போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி மைதானத்தில் ஒரு பக்கம் இருந்த பவுண்டரி பற்றி பேசிக் கொண்டிருந்தார். அந்த பவுண்டரி வெறும் 59 மீட்டர் மட்டுமே இருந்ததாகவும் பேசியிருந்தார். இது என்னை எரிச்சலூட்டியது என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

stokes

அவரின் இந்த கருத்திற்கும், அந்த உலககோப்பை தொடர் குறித்தும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது இந்த கருத்திற்கு பலரும் தங்களது பதிலினை இணையத்தின் வாயிலாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement