இங்கிலாந்து அணியின் வீரரான பென் ஸ்டோக்ஸ்க்கு நியூசிலாந்து அளிக்கவுள்ள கவுரம் – விவரம் இதோ

Stokes

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அந்த அணி உலக கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். உலக கோப்பை தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனது அணிக்கு வெற்றியை தொடர்ந்து பெற்றுத்தந்தார்.

stokes

இறுதிப் போட்டியில் அவர் அடித்த 84 ரன்கள் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. மேலும் சூப்பர் ஓவரில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். இதனால் இங்கிலாந்து அணி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது. போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை தொடரில் மொத்தம் 465 ரன்களுடன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் நியூசிலாந்து இங்கிலாந்தின் ஸ்டோக்சை கௌரவப்படுத்த முன்வந்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணிக்காக ஸ்டோக்ஸ் விளையாடினாலும் அவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். நியூசிலாந்தில் பிறந்த ஸ்டோக்ஸ் தனது 12ஆவது வயதில் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்று அந்த நாட்டுக்காக விளையாடினார்.

Eng-1

தற்போது அவர் பெற்றோர்கள் அங்கிருந்து கிளம்பி மீண்டும் கிறிஸ்ட்சர்ச்சில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக கோப்பையில் சிறப்பாக ஆடிய அவரை கௌரவிக்க நியூசிலாந்து முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த வருடத்தின் சிறந்த நியூஸிலாந்து நாட்டவர் என்ற விருதுக்கு அவரின் பெயர் பரிசு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு கேன் வில்லியம்சன் உட்பட மேலும் பலரையும் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.