வாழ்நாள் முழுவதும் இலவச கண்ணாடி. வித்தியாசமான முறையில் சக வீரருக்கு உதவி புரிந்த – பென் ஸ்டோக்ஸ்

Ben
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவு பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் கடைசி விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றி பெறச்செய்தனர்.

Stokes

- Advertisement -

இந்த போட்டியின் போது இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜாக் லீச் பலமுறை தனது கண் கண்ணாடியை எடுத்து துடைத்து துடைத்து மீண்டும் அதனை அணிந்தார். மேலும் பேட்டிங் போதும் அவர் தனது கண்ணாடியை துடைத்து துடைத்து அணிந்து கொண்டு விளையாடினார்.

இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும் போட்டி முடிந்த பிறகு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டோக்ஸ் ஒரு பதிவினை செய்திருந்தார். அதில் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் கண் கண்ணாடியை இலவசமாக வழங்க உதவி செய்யுமாறு ஆஷஸ் தொடரின் ஸ்பான்சரான ஸ்பெக்ஸ் சேவர்ஸ் என்னும் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கு முறையிட்டு பதிவு செய்திருந்தார்.

Leach

அந்த பதிவை கண்ட அந்நிறுவனம் தற்போது அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில் : நாங்கள் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க உறுதி அளிக்கிறோம் என பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் செய்த உதவியை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement