நைட் க்ளப்பில் கும்மாளம்..! மது போதையில் ராணுவ வீரரை தாக்கிய இங்கிலாந்து வீரர்.

ben-Stroke

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு நைட்கிளப்பில் நடந்த தகராறில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய வழக்கில் தற்போது விசாரணை நடைபெற்றது.ஸ்டோக்ஸ் தான் தற்காப்பிற்காக அவரை தாக்கியதாக விசாரணையில் தெரிவித்தார்.

stokes ben

இங்கிலாந்து அணி கடந்த செப்டெம்பர் 25 தேதி மேற்குஇந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது அப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியும் பெற்றது.வெற்றியை கொண்டாட ஸ்டோக்ஸ் நைட்கிளப் ஒன்றுக்கு சென்றார்.அங்கு ஸ்டோக்ஸ் ரியான் ஹாலே மற்றும் ரியான் அலி ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார் இது அங்கு உள்ள சிசி டிவி கேமராவில் பதிவானது.

வழக்கின்விசாரணை கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது இதன் காரணமாக ஸ்டோக்ஸ் இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.விசாரணையின் போது தான் இரவு 12.46 மணிக்கு கிளப்பில் இருந்து வெளியேறிதாகவும் மீண்டும் நண்பர் அலெகஸ்ஹேல்சுடன் திரும்ப சென்றபோது கிளப் மூடப்பட்டிருந்தது வெளியே ரியான்ஹாலே என்பவருடன் ஏற்பட்ட வாய்தகராறில் அவரைத்தாக்கியதாக கூறியுள்ளார்.

Ben-Stokes

ஹாலேதரப்பில் அவர் ஸ்டோக்ஸ் தன்னை கண்மூடி தனமாக தாக்கினர் என்றும் அப்போதிருந்த நிலையில் அவர் கொன்றிருந்தாலும் கொன்றிப்பார் என தெரிவித்தார்.இதற்கு ஸ்டோக்ஸ் தான் தற்காப்பிற்க்காக மட்டுமே அவரை தாக்கினேன் மற்றபடி வேறுஎதுவும் இல்லை மேலும் தகராறின் போது தான் மது அருந்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.