ஷர்துல் தாகூர் சிக்ஸ் அடித்ததும் அவரது பேட்டை வாங்கி வெயிட்டை செக் செய்த ஸ்டோக்ஸ் – வைரலாகும் வீடியோ

Thakur
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப்போட்டி இன்று தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

toss

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 37 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதன்பின்னர் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 62 பந்துகளில் 78 ரன்களையும், ஹர்டிக் பாண்டியா 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தனர். இறுதி நேரத்தில் க்ருனால் பாண்டியா மற்றும் தாக்கூர் ஆகியோர் முறையே 25 மற்றும் 30 ரன்களை அடிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது.

thakur 1

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் இறுதி நேரத்தில் 21 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என 30 ரன் குவித்து இந்திய அணிக்கு பலம் சேர்த்தார். அதிலும் குறிப்பாக 45-வது ஓவரில் போது பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஒன்றினை ஏறிவந்து லாங் ஆப் திசையில் அற்புதமான சிக்ஸ் ஒன்றினை அடித்தார்.

அந்த அபாரமான சிக்ஸரை கண்ட இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் ஆச்சரியத்துடன் அவரது பேட்டை கையில் வாங்கி சிரித்தபடி அந்த பேட்டின் எடையை கணக்கிட்டார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement