இதற்காக என் வாழ்நாள் முழுவதும் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டே இருப்பேன் – மனம் திறந்த ஸ்டோக்ஸ்

Stokes
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடர் விசித்திரமான முடிவோடு முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளும் சமமான ரன்களைக் குவித்து போட்டி டை ஆனது. உடனே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் எந்த அணி அதிக பவுண்டரிகள் அடித்ததோ அந்த அணி வெற்றி பெற்றது என்று முடிவெடுக்கப்பட்டு இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

Williamson

- Advertisement -

இதனால் முதல் முறையாக கோப்பையை வென்று இங்கிலாந்து அணி வரலாறு படைத்தது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் குறித்து கூறியதாவது :

நான் வேண்டுமென்றே அந்த ஓவர் த்ரோவில் எதுவும் செய்யவில்லை. பந்து எதிர்பாராத விதமாக என் மீது பட்டு பவுண்டரி சென்றது. அந்த ரன்களே இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. நாங்கள் வெற்றி பெற்றதற்கும் அது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

Stokes 2

அந்த ஓவர் த்ரோவுக்காக என் வாழ்நாள் முழுவதும் நான் கேன் வில்லியம்சன்-யிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன். ஏனெனில் அவரது வலி எனக்கு நன்றாக புரிகிறது கோப்பையை இழுந்த வருத்தம் அவருக்குள் இருக்கும். இறுதிவரை நியூசிலாந்து அணி வெற்றிக்காக போராடியது என்னை நெகிழ வைத்தது என்றும் ஸ்டோக்ஸ் கூறினார்.

Advertisement