முதல் இரட்டைசதத்தை சச்சின் அடிக்கவில்லை. அம்பயர் ஏமாத்திட்டாரு – பொய் சொன்ன ஸ்டெயின்

Steyn

ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பதே பெரியதாக இருந்தது. ஆனால், இதனை எல்லாம் தகர்த்து 2010ம் ஆண்டு முதன்முதலாக இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர். இந்த சாதனை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வந்தது. இந்நிலையில் இந்த போட்டியின்போது 190 ரன்களை தான் சச்சினை எல்பிடபிள்யூ முறையில் விக்கெட் வீழ்த்தியதாகவும் அதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை எனவும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் டேட்ல் ஸ்டெய்ன் . இதுகுறித்து அவர் கூறுகையில் :

Sachin

சச்சின் டெண்டுல்கரை 190 ரன்களில் விக்கெட்டை வீழ்த்தி இருந்தேன். அவர் எல்பிடபிள்யூ ஆனார் ஆனால் அவுட் என தெரிந்தும் அம்பயர் இயான் கூல்ட் அவருக்குகு அவுட் கொடுக்கவில்லை. மேலும் சுற்றி மைதானத்தை பார்த்துவிட்டு, இந்தக் கூட்டத்தைத் தாண்டி நான் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாமா? என்பது போல் என்னை பார்த்தார்.

சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதாக நான் நினைத்தேன் என்று கூறினார் ஸ்டெய்ன். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால். 150 ரன்களுக்கு பின்னர் டேல் ஸ்டெயின் பந்துகள் மூன்றை மட்டுமே சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார். அதிலும் 196 ரன்கள் இருந்தபோது டேல் ஸ்டைன் சச்சின் டெண்டுல்கருக்கு 3 பந்தினை மட்டுமே வீசினார்.

Steyn 1

அந்த மூன்று பந்தினையுமே தனது பேட்டில் வாங்கினார் சச்சின் டெண்டுல்கர்.அதே நேரத்தில் 37வது ஓவருக்குப் பின்னர் 10 ஓவர்கள் கழித்து 47-வது ஓவரில் தான் டேல் ஸ்டெயின் பந்து வீச வந்தார். ஒரு ஓவரில் 3 பந்துகளை மட்டுமே சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார். அதன் பின்னர் 49 ஓவர் முழுவதையும் தோனியை சந்தித்தார். நிலைமை இவ்வாறு இருக்க ஸ்டெய்ன் தற்போது கண்டபடி உளறி மாட்டியுள்ளார்.

- Advertisement -

இவரது இந்த பேட்டியினை கண்ட இந்திய ரசிகர்கள் அந்த போட்டியின் புள்ளிவிவரங்களை எடுத்து ஸ்டெயினை கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் அவரது இந்த கருத்திற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.