இந்திய அணியின் இந்த வீரர் தான் உலகின் நம்பர் 1 பவுலர் – ஸ்டெயின் புகழாரம்

Steyn
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வங்கதேச அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

shami

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக வரும் 22ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் இந்தூரில் தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர் ஸ்டெயின் இணையத்தில் கேள்விக்கு பதில் கூறியதாவது :

தற்போது இருக்கும் பந்துவீச்சாளராக சிறந்த பந்துவீச்சாளராக நான் இந்திய அணியில் முகமது ஷமியை கூறுவேன். ஏனெனில் அவர் தற்போது இருக்கும் பார்மை பார்க்கும் போது உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக அவரே எனக்கு நினைவில் வருகிறார். அவரின் வேகமும், ஸ்விங்கும் வேற லெவலில் இருக்கிறது. எனவே அவர் தான் தற்போது சிறந்த பந்துவீச்சாளர் என்றும் தொடர்ச்சியாக அவரால் சிறப்பாக பந்துவீசி முடிகிறது என்றும் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Shami

வங்கதேச அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற போட்டியில் ஷமி அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் சமீபத்தில் வெளியான டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஷமி 7 ஆம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement