இந்திய அணியில் இவரிடம் வம்பிழுக்காதீங்க. அப்படி செய்தால் அவர் கட்டாயம் திருப்பி அடிப்பார் – ஸ்டீவ் வாக்

Steve-Waugh
- Advertisement -

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. டிசம்பர் 17-ம் தேதி முதல் டி20 தொடரும், ஜனவரி 15-ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 4 டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் என மிக நீளமான தொடர் நடைபெறப்போகிறது.

INDvsAUS

- Advertisement -

இதற்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக இரு தரப்பு கிரிக்கெட் வாரியங்களும் செயல்படுத்தி வருகின்றன. 2018 ஆம் ஆண்டு கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது வரலாற்றை மாற்றி எழுதும் வகையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் எந்த ஒரு இந்திய கேப்டனும் தற்போது விராட் கோலி செய்த இந்த சாதனையை செய்து இல்லை. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் குறிப்பாக எப்போது சென்றாலும் சில சதங்கள் அடிப்பதை வழக்கமாகக் கொண்டவர் விராட் கோலி.

steve waugh

இதன் காரணமாக விராட் கோலியிடம் வார்த்தைப் போரில் ஈடுபட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

kohli

“விராட் கோலி உலக தரம்வாய்ந்த வீரர். அவரிடம் வார்த்தை இப்போது எடுபடாது நீங்கள் வார்த்தைகள் அவரை திட்டினாள், மீண்டும் அவர் திட்டுவார். மேலும் அவரை உற்சாகப்படுத்தும். அவரிடம் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள வேண்டும். அவரை பார்த்து பதமாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சீறி விடுவார் அது உங்களுக்கு தான் ஆபத்தாக முடியும்” என்று தெரிவித்து இருக்கிறார் மைக்கேல் வாகன்.

Advertisement