தோனி ஒரு ஜீனியஸ் இருப்பினும் பலரும் அவரை விமர்சிக்க இது ஒன்றே காரணம் – ஸ்டீவ் வாக்

Steve-Waugh
- Advertisement -

உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற செய்தி தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும் இந்திய அணி குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு கிடைத்த ஒரு ஜீனியஸ். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் ரன் அவுட் ஆகவில்லை என்றால் அந்தப் போட்டியை அவர் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து இருப்பார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தோனியை அனைவரும் விமர்சிக்க காரணம் யாதெனில் அவர் ஒரு சிறந்த வீரர். போட்டியை கணிக்கும் தன்மை கொண்ட அபாரமான வீரர் எனவேதான் அவரைப் பற்றி விமர்சனம் தொடர்ந்து எழுகிறது. அவர் சாதாரணமான வீரனாக இருந்தால் இதுபோன்ற விமர்சனங்கள் எழுதி இருக்க வாய்ப்பு இருக்காது.

Dhoni

அவர் தற்போதைய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரர் என்பதால் அவர் மீது பல விமர்சனங்கள் எழுகின்றன. தோனி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு போட்டியில் விளையாடவில்லை என்றால் அவரை விமர்சிக்க கூடாது இந்திய அணிக்காக பல போட்டிகளில் வென்று என்று கொடுத்திருக்கிறார் என்று தோனி குறித்து ஸ்டீவ் வாக் பேசினார்.

Advertisement