இவர் இல்லாத இந்திய அணி வெயிட்டா இருக்காது. சுவாரஸ்யமே போய்டும் – ஸ்டீவ் வாக் கருத்து

Steve-Waugh
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர் . ரோகித் சர்மா காயம் அடைந்து இருப்ததால் அவருக்கு டெஸ்ட் அணியில் மட்டும் இடம் கிடைத்துள்ளது.

INDvsAUS

- Advertisement -

அதே நேரத்தில் வாஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன் போன்ற தமிழக இளம் வீரர்களுக்கும் இடம் கிடைத்திருந்தது. கேப்டன் விராட் கோலிக்கு அடுத்த வருடத் துவக்கத்தில் குழந்தை பிறக்கப் போவதாக செய்தி வந்தது. அதை அவர் உறுதி செய்திருந்தார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தானும் தன் மனைவி அனுஷ்காவும் பெற்றோர்களாக மாறப் போவதாக அறிவித்திருந்தார்

இதில் சிக்கல் என்னவென்றால் அவருக்கு முதல் குழந்தை பிறக்கும் போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டிருக்கும். இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் முடித்துவிட்டு நேரடியாக விராட் கோலி இந்தியா திரும்பி விடுவார். இங்கு வந்து தனது குடும்பத்தையும் தன் மனைவி அனுஷ்காவையும் கவனித்துக் கொள்வார் என்று முடிவெடுத்திருக்கிறார்.

anushka

இந்நிலையில் கடைசி 3 போட்டிகளிலும் கோலியால் கலந்துகொள்ள முடியாதது குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியதாவது…‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாடமாட்டார் என்பது லேசான ஏமாற்றமும், ஆச்சரியமும் அளிக்கிறது. இந்த தொடர் விராட்கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்றாலும் குடும்பத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Kohli

விராட்கோலி இல்லாதது டெஸ்ட் போட்டி தொடரில் விறுவிறுப்பை குறைக்கக்கூடும். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் இல்லாத போது இந்திய அணி வெற்றி பெற்றதை போன்று தான் இருக்கும். குறிப்பாக இதுபோன்ற பெரிய போட்டி தொடரில் நீங்கள் சிறந்த அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்’ என்றார்.

Advertisement