இந்தியா இங்கிலாந்து 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இவங்க தான் ஜெயிக்கனும் – அதான் என் ஆசை ஸ்டீவ் ஸ்மித்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்துள்ளது.

cup

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நாலாவது டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இந்த பதிவில் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் நல்ல ஐடியா. இந்த வாரம் முழுவதும் நான் இந்த இங்கிலாந்து அணிக்கு தான் ஆதரவு கொடுக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஆதரவு எதற்காக என்பது குறித்து ஒரு பின்கதை உள்ளது. அதாவது இங்கிலாந்து அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

smith

அதோடு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தது. ஆனால் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து ஒருவேளை கைப்பற்றும் பட்சத்தில் என் தொடரானது 2-2 என்ற நிலையில் சமநிலை முடியும்.

- Advertisement -

ind

அப்படி முடியும்போது ஆஸ்திரேலிய அணி நேரடியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இதன் காரணமாகவே ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக பதிவை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.