விராட் கோலி எடுத்த இந்த முடிவு சரியானது தான். நான் அவரை பாராட்டுகிறேன் – ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்

Smith
- Advertisement -

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரை சிறப்பாக விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் ஒரு நாள் கோப்பையை ஆஸ்திரேலிய அணியும், டி20 கோப்பையை இந்திய அணியும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. 17ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு 2வது பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றது.

INDvsAUS

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இந்திய அணி பகல் இரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நாடு திரும்புவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்தின் துவக்க நாட்களிலோ விராட் கோலிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக அவர் தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என பிசிசிஐ இடம் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ அவருக்கு அனுமதியுடன் கூடிய விடுப்பு அளித்து உள்ளது. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் 21ம் தேதிக்கு பிறகு கோலி நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் கோலி விளையாட மாட்டார் என்பதால் இது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகம் என்று பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கோலி விடுப்பு எடுத்தது தவறு என்றும் சில கருத்துக்கள் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

smith

இந்நிலையில் கோலி விடுப்பு எடுத்ததில் எந்தவிதமான தவறும் இல்லை. அது பாராட்டுக்குரிய ஒன்று என ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். அவர் டெஸ்ட் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு இழப்புதான். ஆனாலும் கிரிக்கெட் மட்டுமே அவருடைய வாழ்க்கை இல்லை கிரிக்கெட்டை தவிர்த்து அவருக்கு ஓர் அழகான வாழ்க்கை இருக்கிறது.

Anushka

அவருடைய குடும்ப வாழ்க்கை இப்போதுதான் துவங்க இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இப்போதும் அவர் விளையாடுவதையே விரும்புவார். அப்படிப்பட்ட நபர் தற்போது இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விடுப்பு எடுக்கிறார் என்றால் நிச்சயம் அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும் என ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement