இந்த தொடரில் இவர் இடம்பெறாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு – ஸ்மித் ஓபன் டாக்

Smith
- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயணத்தில் இன்னும் நான்கு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் தொடர் அடிலெய்டில் வருகின்ற 17ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் தொடர் பகலிரவு டெஸ்டாக நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். இதற்குமுன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா தொடரை வென்றது. இதையடுத்து டி20 தொடரில் 2-1 என இந்தியா தொடரை வென்றது. இதனால் இரு அணிகளும் டெஸ்ட் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

INDvsAUS

- Advertisement -

அதுமட்டுமின்றி இரு அணிகளிலும் காயத்தில் இருக்கும் முக்கிய வீரர்கள் இடம் பெறுவார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்தியா திரும்புவதாக அறிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின்போது காயத்திற்கு உள்ளான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் பங்கேற்க முடியாமல் போனது.

ஆனால் தற்போது ரோகித் சர்மா தனது உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றுவிட்டதால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என அறிவித்துள்ளனர். ஆனால் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா காயத்தின் காரணமாக இடம்பெறவில்லை. இசாந்த் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் இஷாந்த் சர்மா குறித்து கூறுகையில் : “இஷாந்த் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பு. இவர் அதிகமான போட்டிகளில் பங்குபெற்ற அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். இவர் சிறந்த வேகப்பந்து வீச்சாளரும் கூட. இஷாந்த் சர்மா இல்லாதது இந்திய அணியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும். இந்திய அணியும் இவரைஅணியில் சேர்க்க நினைத்திருப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

Ishanth

அதுமட்டுமின்றி இந்திய அணி 2018-19 ஆண்டில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது இஷாந்த் சர்மா 3 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றபோது 71 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement