இதற்காக தான் இரண்டு மாசம் வெயிட் பண்ணேன். அதிர்ஷ்டமும் கைகொடுத்தது – ஆட்டநாயகன் ஸ்மித் பேட்டி

Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்ட நாயகன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : நான் கடந்த இரண்டு மாதங்களாக இதுபோன்ற ஒரு சிறப்பான ஆட்டத்தை தான் எதிர்பார்த்து காத்திருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்னர் எனக்கு வலைப்பயிற்சியில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்பதை உணர முடிந்தது. இன்று சிறப்பான வகையில் விளையாடி இருக்கிறேன் துவக்கத்தில் பின்ச் மற்றும் வார்னர் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் நான் உள்ளே வந்ததும் என்னால் விரைவாக ரன்களை குவிக்க முடிந்தது.

smith 1

மேலும் நான் பந்தை அடிப்பதற்காக மட்டுமே பார்த்தேன். மேலும் சில ரிஸ்க்களையும் இந்த போட்டியில் நான் எடுத்தேன். பவுலர்களை சரியான நேரத்தில் டார்கெட் செய்து அடிக்க வேண்டும் என்று நினைத்து அடித்தேன். அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது இதுபோன்ற போட்டிகளில் சில அதிர்ஷ்டம் தேவை இன்றைய போட்டியில் எனக்கு எனக்கு அந்த அதிர்ஷ்டம் உதவியது என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement