இந்திய அணியின் மிகச்சிறந்த பீல்டர் இவர்தான். இவர் வேறலெவல் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து

Smith
- Advertisement -

கொரோனோ வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் நடைபெறவில்லை. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரும், இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரில் தற்போது வரை எந்தவொரு இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

Ind

- Advertisement -

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தில் முன்னணி வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவது, சக வீரர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடுவது என தங்களை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் இதே போன்று இணையத்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது இந்திய அணி குறித்து கேட்கப்பட்ட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தயக்கமின்றி பதிலளித்துள்ளார். அதில் இந்திய அணியின் மிகச்சிறந்த பில்டர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டது.

Jadeja

அதற்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியில் என்னை பொறுத்தவரை மிகச்சிறந்த பீல்டர் யாரெனில் ஜடேஜா தான் என்று கூறினார். அவர் தற்போது உலகத்தரத்தில் பீல்டிங் செய்து வருகிறார். மேலும் எனக்கு பிடித்த இந்திய வீரர் என்றால் அது கேஎல் ராகுல் தான் அவருடைய பேட்டிங் ஸ்டைல் மற்றும் கிரிக்கெட் ஆர்வம் இரண்டும் என்னை கவர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Rahul-1

மேலும் விக்கெட் கீப்பர் மஹேந்திர சிங் தோனி குறித்து கூறுகையில் அவர் ஒரு ஜாம்பவான் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அவர் பதிலளித்தார். இந்த பேட்டியில் அவர் கோலி குறித்து எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement