விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் இவங்க 2 பேரும் டாப்பா வருவாங்க – ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்

Smith-1

சர்வதேச கிரிக்கெட்டில் தலை சிறந்த பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் திகழ்ந்து வருகிறார். அவரைப் போன்றே உலக அளவில் விராட் கோலி, இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் என இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக இவர்கள் நால்வரும் பார்க்கப்படுகின்றனர்.

smith

இவர்களுக்கு இடையே கடுமையான போட்டி எப்போதும் உண்டு. மேலும் இதில் யார் சிறந்த பேட்ஸ்மென் என்பதை அவ்வப்போது கேள்வி எழுவதும் உண்டு. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஸ்மித் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தனது அசாத்தியமான திறனை வெளிக்காட்டி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் உலகின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து மனம்திறந்த பேட்டி ஒன்றை ஸ்மித் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : என்னை பொறுத்தவரை கிரிக்கெட் போட்டியின் தலைசிறந்த ஒருநாள் வீரர் என்றால் தற்போது விராட் கோலியை தான் கூறுவேன். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 11,867 ரன்கள் குவித்துள்ளார்.

Smith

மேலும் இதில் நாற்பத்தி மூன்று (43) சதங்களை அடித்துள்ளார். சச்சினின் சாதனையை தொட அவருக்கு இன்னும் ஏழு சதங்களே தேவை உள்ளது. ஏபி டி வில்லியர்ஸ் குறித்து கூற வேண்டுமென்றால் அவர் ஒரு வித்தியாசம் ஆனவர் என்று ஸ்மித் கூறியுள்ளார். மேலும் இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் பொதுவாகவே சிறப்பாக விளையாடி வருவதாகவும், கோலியை தவிர்த்து வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களான ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதாகவும் மனதார பாராட்டி உள்ளார்.

- Advertisement -

rahul 4

Samson

எப்போதும் விராட் கோலி மற்றும் ஸ்மித் இடையே யார் சிறந்த பேட்ஸ்மென் என்ற கடுமையான போட்டி நிகழ்ந்து வரும் வேளையில் ஒரு கோலியே சிறந்தவர் என்று ஸ்மித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.