இதை செஞ்சுருந்தா ஹைதெராபாத் 277 அடிச்சுருக்க மாட்டாங்க.. பாண்டியா கேப்டன்ஷிப் மீது ஸ்மித் அதிருப்தி

Steve SMith
- Advertisement -

ஐபிஎல் 2024 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற 8வது போட்டியில் மும்பையை சரமாரியாக அடித்து நொறுக்கிய ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 277/3 ரன்கள் குவித்து அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் அடித்த அணியாக பிரம்மாண்ட சாதனை படைத்தது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, க்ளாஸென் 80* ரன்கள் எடுத்தனர். அதை சேசிங் செய்த மும்பை முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 42 திலக் வர்மா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ், ஜெய்தேவ் உனட்கட் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

பாண்டியாவின் தவறு:
முன்னதாக அந்த போட்டியில் மற்ற மும்பை பவுலர்கள் அனைவரும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினர். ஆனால் பும்ரா மட்டும் 4 ஓவரில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து 9 என்ற எக்னாமியில் நன்றாக பந்து வீசினார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு முதல் 13 ஓவரில் பாண்டியா வெறும் 1 ஓவர் மட்டுமே கொடுத்தார். அதற்குள் ஹைதராபாத் அணியினர் 180 ரன்கள் அடித்து போட்டியை தலைகீழாக மாற்றி விட்டனர்.

இந்நிலையில் பும்ராவை அப்போட்டியில் ஆரம்பத்திலேயே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியிருந்தால் கண்டிப்பாக 277 ரன்கள் அடித்த ஹைதராபாத்தை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவை 13வது ஓவரில் மீண்டும் பந்து வீச அழைத்ததில் அவர்கள் சாதுரியத்தை விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

எதிரணியினர் இப்படி அடிக்கும் போது உங்களுடைய சிறந்த பவுலரை நீங்கள் விரும்பும் நேரத்தை விட முன்கூட்டியே கொண்டு வந்திருக்க வேண்டும். இது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உடனடியாக உங்களை உட்படுத்திக் கொள்வதாகும். டெத் ஓவருக்கு பதில் நான் பும்ராவை 15 – 16வது ஓவரில் போட வைத்து விக்கெட்டுக்குள் எடுக்க முயற்சித்திருப்பேன். அப்படி விக்கெட்டுகளை எடுத்தால் ரன் ரேட் குறையும். ஹைதெராபாத் பேட்ஸ்மேன்கள் எப்படியிருந்தாலும் உங்களை கடைசியில் அடிக்கப் போகிறார்கள்”

இதையும் படிங்க: சத்தியமா நாங்க இப்படி நெனச்சி விளையாடல.. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய பின்னர் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

“எனவே ஒருவேளை பும்ரா ஆரம்பத்திலேயே பந்து வீசி சில ரிஸ்க் எடுத்திருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கலாம். குறிப்பாக 277 ரன்கள் அடித்த ஹைதராபாத் 250 ரன்களுக்குள் நின்றிருக்கும். அதை சேசிங் செய்திருக்கலாம். ஆனால் 13வது ஓவர் வரை பும்ரா வெறும் ஓவர் மட்டுமே வீசியது எனக்கு குழப்பமாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement