சத்தியமா நாங்க இப்படி நெனச்சி விளையாடல.. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய பின்னர் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

Cummins
- Advertisement -

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்று முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது டிராவிஸ் ஹெட்(62), அபிஷேக் ஷர்மா(63), மார்க்கம்(42), கிளாசின்(80) ஆகியோரது மிகச் சிறப்பான அதிரடி காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை குவித்தது.

- Advertisement -

துவக்கத்திலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் பவுண்டரியும், சிக்ஸர்களுமாக பறக்க விட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் துவக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடியது.

இருப்பினும் இறுதிவரை சென்று வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த போட்டியில் பந்து மைதானத்தின் அனைத்து புறங்களிலும் பறந்து கொண்டிருந்தது.

- Advertisement -

நாங்கள் பந்துவீசும் போது கூட மும்பை அணியின் வீரர்கள் அடித்து விளையாடினர். எப்பொழுதெல்லாம் பவுண்டரி தேவையோ அப்போதெல்லாம் அவர்கள் பவுண்டரிகளை விளாசிகொண்டே இருந்தார்கள். இருப்பினும் இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. அபிஷேக் சர்மா இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஐபிஎல் போன்ற அழுத்தமான ஒரு பெரிய களத்தில் இது போன்ற சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அற்புதமாக இருந்தது.

இதையும் படிங்க : மும்பையை அடித்து நொறுக்கிய ஹைதராபாத்.. ஆர்சிபி’யை முந்தியது போக.. ரசிகர்கள் அறியாத 2 உலக சாதனை

இந்த போட்டி ஆரம்பிக்கும் போது நிச்சயம் 270 ரன்களை எல்லாம் நினைத்து நாங்கள் விளையாடவில்லை. கடைசிவரை பாசிட்டிவாகவும், அதிரடியாகவும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் இவ்வளவு பெரிய ரன்கள் கிடைத்தது மகிழ்ச்சி இந்த மைதானத்தில் ரசிகர்கள் எங்களுக்கு வழங்கும் ஆதரவு அற்புதமாக உள்ளது என கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement