இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்த ஸ்மித் – அப்படி என்ன சாதனை தெரியுமா ?

Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் அடித்த சதத்தின் மூலம் அவர் ஒரு வரலாற்று சாதனையில் இடம் பிடித்துள்ளார். அதாவது ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் பட்டியலில் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார். 51 பந்துகளில் சதமடித்து அதிவேக சதம் விளாசிய என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளா. அதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஸ்மித் தற்போது இணைந்துள்ளார்.

smith 1

இந்த போட்டியில் 62 பந்துகளை சந்தித்த போது தனது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் 66 பந்துகளை சந்தித்த அவர் 4 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் என 105 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்படும் ஸ்மித் இந்த தொடரில் அச்சுறுத்தலாக இருப்பார் என்று பலரும் கூறி வந்த நிலையில் முதல் போட்டியிலேயே சதம் அடித்து தான் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை அவர் மீண்டும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement