அவரும் சதமடிச்சுட்டாரு, நீங்க எப்போதான் அடிப்பீங்க – விராட் கோலியை பார்த்து ஏங்கும் இந்திய ரசிகர்கள்

Steve Smith Virat Kohli IND vs AUS
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. கடந்த ஜூன் 7-ஆம் தேதியன்று துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்று தன்னை உலகச் சாம்பியன் என நிரூபித்த ஆஸ்திரேலியாவை அதன்பின் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் தோற்கடித்த இலங்கை 30 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை சாய்த்து வரலாற்று வெற்றியை பதிவு செய்து பதிலடி கொடுத்தது.

அதை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 29-ஆம் தேதியன்று துவங்கிய முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று அசத்தியது. அதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூலை 8-ஆம் தேதியான நேற்று கால்லே மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் டேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் அபாரம்:
அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 32 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் நிதானமாக பேட்டிங் செய்து இலங்கை பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இருவருமே அரைசதம் கடந்த இந்த ஜோடியில் முதலாவதாக சமீப மாதங்களில் சதமடிக்க முடியாமல் தடுமாறியதால் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அந்தஸ்தை இழந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 12 பவுண்டரியுடன் சதமடித்து 104 ரன்கள் குவித்து 3-வது விக்கெட்டுக்கு 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ட்ராவிஸ் ஹெட் 12 ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 4 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தினார். இருப்பினும் இதர பேட்ஸ்மேன்கள் இலங்கையின் சுழலில் சிக்கியதால் ஆஸ்திரேலியா 364 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 16 பவுண்டரியுடன் ஸ்டீவ் ஸ்மித் கடைசி அவரை அவுட்டாகாமல் 145* ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மீண்டெழுந்து ஸ்மித்:
நவீன கிரிக்கெட்டில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவான் டான் ப்ராட்மேனை போல அற்புதமாக செய்யும் திறமை பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோருடன் உலகின் மிகசிறந்த “ஃபேப் 4” பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார். சொல்லப்போனால் அந்த 3 வீரர்களை விட 60க்கும் மேற்பட்ட டேட்டிங் சராசரியில் எதிரணிகளை வெளுத்து வாங்கிய ஸ்டீவ் ஸ்மித் 27 சதங்களை அதிவேகமாக விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இருப்பினும் கடைசியாக கடந்த ஜனவரி 2021இல் இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்த அவர் அதன்பின் கடந்த ஒன்றரை வருடங்களாக 19 மாதங்களாக 28 இன்னிங்ஸ்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் திணறி வந்தார். ஆனாலும் அந்த மோசமான கதைக்கு ஒரு வழியாக நேற்றைய போட்டியில் சதமடித்து முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர் தற்போது ஓய்வு பெறாமல் விளையாடும் வீரர்களில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ஸ்டீவ் ஸ்மித் : 28 (87 போட்டிகள்)
2. ஜோ ரூட் : ஜோ ரூட் (121 போட்டிகள்)
3. விராட் கோலி : 27 (102 போட்டிகள்)
4. கேன் வில்லியம்சன் : 24 (88 போட்டிகள்)
5. டேவிட் வார்னர் : 24 போட்டிகள் (96 போட்டிகள்)

ஏக்கத்தில் ரசிகர்கள்:
இதை பார்த்த இந்திய ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித் கூட ஒன்றரை வருடம் கழித்து சதமடித்து விட்டார் ஆனால் 2019க்குப்பின் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலி எப்போதுதான் சதமடிப்பார் என்ற ஏக்கத்துடன் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். இத்தனைக்கும் கடந்த ஜனவரியில் இருந்து கேப்டன்ஷிப் அழுத்தத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர பறவையாக விளையாடும் அவர் கடந்த 6 மாதங்களில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.

கடைசியாக பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டான அவர் இந்தியா வரலாற்று தோல்வியை சந்திக்க முக்கிய பங்காற்றினார். அதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி நிற்கும் அவரை இந்திய அணி நிர்வாகம் பொறுமையிழந்து நீக்குவதற்கு முன்பாக சதமடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement