டெட்பால் சர்ச்சை. அம்பயருடன் மல்லுக்கட்டிய ஸ்மித். விறுவிறுப்பாக துவங்கிய பாக்சிங் டே டெஸ்ட் – விவரம் இதோ

Smith
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று விளையாடு டெஸ்ட் போட்டி “பாக்ஸிங் டே டெஸ்ட்” போட்டி என்று அழைக்கப்படும். தொடர்ந்து ஆண்டுதோறும் நடந்து வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 32 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து அணி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

aus vs nz

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது முதல் நாள் தேநீர் இடைவேளை பிறகுவரை ஆஸ்திரேலிய அணி 76 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் அடித்துள்ளது. வார்னர் 41 ரன்களும், லாபுசாக்னே 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்மித் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டியில் சண்டைக்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஏனெனில் நியூசிலாந்து வீரர் வாக்னர் வீசிய பந்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் அடிக்காமல் தனது முதுகில் அடிவாங்கி ஒரு ரன் ஓட முயற்சித்தார். ஆனால் அதனை அம்பயர் “டெட்பால்” என்று அறிவித்தார். அதன் பிறகு அதே ஓவரில் மீண்டும் 5 ஆவது பந்தில் அடி வாங்கி ஒரு ரன் ஓட ஸ்மித் முற்பட்ட போதும் அம்பயர் “டெட்பால்” என்று அவர் அறிவித்தார்.

Smith 1

இதனால் ஸ்மித்துக்கும் அம்பயருக்கும் சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்மித் அம்பயரை நோக்கி தனது ஆதங்கத்தை கை அசைவின் மூலம் தெரிவித்தார். ஆனால் அம்பயர் ஐசிசியின் விதிமுறைப்படியே டெட்பால் வழங்கியுள்ளார். என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

umpire

அதன்படி 23.2.1 என்ற விதியின்படி ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முற்படவேண்டும் இல்லையெனில் அடிபடாமல் காப்பதற்காக பந்தை விட்டு விலக வேண்டும். இதை இரண்டையும் தவிர்த்து வேண்டுமென்றே பந்தை உடம்பால் தடுத்து ரன் ஓடக்கூடாது. இந்த விதியின் படியே அம்பயர் டெட்பால் அறிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் பாக்சிங் டே டெஸ்ட் முதல் நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Advertisement