ஆமாம்.. சச்சினுக்கு வேண்டுமென்றே அவுட் கொடுத்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள். உண்மையை ஒத்துக்கொள்கிறேன் – அம்பயர் உருக்கம்

Bucknor
- Advertisement -

இந்த காலகட்டத்தில் நடுவர்கள் செய்யும் தவறை உடனடியாக திருத்தி வழிசொல்ல டிஆர்எஸ் என்ற முறை இருக்கிறது. ஆனால் 15 வருடங்களுக்கு முன்னர் இந்த நிலைமை கிடையாது. நடுவர்கள் ஆடுகளத்தில் என்ன சொல்கிறார்களோ அதுதான் சட்டம். ஒரு வீரரை வெளியேறச் சொன்னால் அவர் வெளியேறிய ஆகவேண்டும். தவறான அவுட் கொடுத்து விட்டாலும் வெளியே சென்றுவிட வேண்டும்.

- Advertisement -

இப்படி இருப்பதனால் நடுவர்கள் ஒரு சில நேரங்களில் எதிர்பாராத தவறுகளை செய்து பல வீரர்களுக்கு தெரியாமல் அவுட் கொடுத்துள்ளனர். அதிலும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் நடுவர் ஸ்டீவ் பக்னர் சச்சின் டெண்டுல்கருக்கு அதிகமாக அவுட் கொடுத்து பிரபலமானவர்.

கடந்த 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஜேசன் கில்லஸ்பி பந்தில் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், தொலைக்காட்சியில் அவுட் இல்லை என்று தெரியவந்தது. மேலும், 2005 ஆம் ஆண்டு அப்துல் ரசாக் வீசிய பந்தில் ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சின் பேட்டில் பந்து படாமல் சென்றது. ஆனால் இதற்கும் அவுட் கொடுத்தார் ஸ்டீவ் பக்னர்.

Bucknor 1

அந்த இவையெல்லாம் காலகட்டத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விக்கெட்டுகள். இந்நிலையில், இந்த தவறுகள் பற்றி தற்போது பேசியுள்ளார் ஸ்டீவ் பக்னர். அவர் கூறுகையில்…சச்சின் டெண்டுல்கருக்கு நான் இரண்டு முறை தவறாக முடிவை கொடுத்து வெளியேற்றி உள்ளேன். எந்த ஒரு நடுவரும் வேண்டுமென்றே தவறான முடிவுகளை வழங்குவதில்லை.

- Advertisement -

ஆனால் மனிதர்கள் செய்யும் தவறு செய்வது சகஜம். ஒருமுறை ஆஸ்திரேலியாவில் பந்து ஸ்டம்பிற்கு மேலே சென்றது. அதற்கு நான் அவுட் கொடுத்தேன். இரண்டாவது முறை இடங்களில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது பேட்டில் பந்து படவில்லை இதற்கும் நான் அவுட் கொடுத்தேன்.

Bucknor 2

ஏனெனில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும்போது மைதானத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். நம் காதில் ஒன்றுமே கேட்காது. ஒரு லட்சம் ரசிகர்கள் கோஷமிடும் இடத்தில் இது போன்ற தவறான முடிவுகள் ஏற்படுவது சகஜம் இது மனித வாழ்வின் ஒரு பகுதி ஆகும் என்று தெரிவித்துள்ளார் ஸ்டீவ் பக்னர்.

Advertisement