- Advertisement -
ஐ.பி.எல்

தப்பு நடந்தது இங்கு தான்.. பஞ்சாப் அணிக்கெதிரான தோல்விக்கு பின் பேசிய – சி.எஸ்.கே கோச் ஸ்டீபன் பிளமிங்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த 2023-ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதற்கடுத்து கடந்த 2024-ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது.

தொடர் தோல்விக்கான காரணம் இதுதான் – ஸ்டீபன் பிளமிங்

சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு இந்த தொடரே கடைசி சீசனாக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரினை வெற்றியுடன் முடித்து அவரை சாம்பியன் வீரராக வழி அனுப்ப வேண்டும் என்ற முனைப்புடன் சி.எஸ்.கே அணி விளையாட துவங்கியது. அதன்படி நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

ஆனால் அதற்கு அடுத்து தற்போது வரை நடைபெற்றுள்ள நான்கு ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு இந்த தொடரின் முதல் ஐந்து போட்டியில் விளையாடிய சென்னை அணி நான்கு தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து பரிதாபமான நிலையில் உள்ளது.

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய சென்னை அணி 201 ரன்கள் மட்டுமே குவித்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியை பொறுத்தவரை சென்னை அணியின் மோசமான பீல்டிங் காரணமாகவே தோல்வியை சந்தித்தது என பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணி நேற்று அடைந்த தோல்வி குறித்து பேசிய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் : நேற்றைய போட்டியை பொறுத்தவரை பீல்டிங்கில் தான் நமது அணி அதிக தவறுகளை செய்தது. அழுத்தமான சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற துல்லியம் தற்போது இல்லாததால் இந்த போட்டியை இழந்ததாக நினைக்கிறேன். பிரியான்ஷ் ஆர்யா மிகச் சிறப்பாக விளையாடி எங்களை அழுத்தத்திற்குள் கொண்டு சென்று விட்டார். அவரது சிறப்பான ஆட்டமே எங்களிடம் இருந்து போட்டியை கொண்டு சென்று விட்டது.

இதையும் படிங்க : தோனிக்கு எதிராக யுஸ்வேந்திர சாஹலுக்கு ஒரே ஒரு ஓவரை மட்டும் வழங்கியது ஏன்? – ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

ஐபிஎல் போட்டிகளில் நாம் தொடரை வெல்ல வேண்டுமெனில் நமது அணியில் உள்ள முதல் மூன்று வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். ஆனால் இந்த தொடரில் அதை நாங்கள் செய்யவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தாலும் மிடில் ஓவர்களில் அதே வேகத்தில் எங்களால் ஆட முடியாமல் போனதும் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஸ்டீபன் பிளமிங் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -