இந்த 6 நாட்களில் நாங்க முழுசா ரெடி ஆயிட்டோம். எங்கள் திட்டம் இதுதான் – பிளமிங் பேட்டி

Fleming
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் மோசமான செயல் பாட்டை காட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த பத்து வருடத்தில் இல்லாத வகையில் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் மைனஸ் வீதத்தில் தான் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

CSK-1

சுரேஷ் ரெய்னா அணியில் இல்லை அவர் கடந்த பத்து வருடங்களாக அணியில் பேட்டிங் ஆடிவந்தார். அதேபோல் கடந்த இரண்டு வருடமாக நன்றாக சுழற்பந்து வீச்சை விளையாடிய ஹர்பஜன்சிங் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். அதே நேரத்தில் முதல் போட்டியில் வெற்றிக்குக் காரணமாக இருந்த அம்பத்தி ராயுடு அடுத்த இரண்டு போட்டிகளில் காயம் அடைந்து விட்டார்.
இதன் காரணமாக தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.

- Advertisement -

ஏழு நாட்களுக்கு பிறகு சென்னை அணி இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறுகையில் “முதல் மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து எங்களுக்கு நடைபெற்றது அனைத்து போட்டிகளும் வேறுவேறு மைதானத்தில் நடந்து கொண்டிருந்தது.

Fleming

எப்படி இருந்தாலும் இந்த ஆறு நாட்கள் எங்களுக்கு நல்ல இடைவெளியாக அமைந்திருக்கிறது. இந்த ஆறு நாட்களும் இங்கு உள்ள சூழ்நிலையை பற்றி நன்றாக அறிந்து கொண்டோம். ஒவ்வொரு அணிகளுக்கும் முதல்முறையாக ஒரு அணியை எதிர்த்து விளையாடுவது மிகவும் கடினமாக இருக்க போகிறது.

Fleming 1

அதற்கு வெளியேயும் மைதானத்திற்கு வெளியேயும் சில சவால்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இடைவெளியை நாங்கள் சிறந்த வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டீபன் பிளமிங்.

Advertisement