இந்த 12 ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இவரே மிகச்சிறந்த கேப்டன் இவர்தானாம் – வெளியான சூப்பர் தகவல்

CskvsMi
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவிலும் ரசிகர்களின் ஓத்துழைப்பு இந்த தொடருக்கு கிடைத்ததால் இந்த தொடர் ஆண்டுதோறும் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் 13 சீசனாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெற இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு இந்த தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்ற சர்வே நடைபெற்றது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அனைத்தையும் சேர்த்து யார் சிறந்த கேப்டன்? யார் சிறந்த வீரர்? என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் முன்னாள் வீரர்கள் பத்திரிக்கையாளர்கள் கிரிக்கெட் நிபுணர்கள் வர்ணனையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் அலசி ஆராய்ந்து இதற்கான முடிவை எட்டினர். இறுதியாக அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் மகேந்திரசிங் தோனி ஆகியோர் சிறந்த கேப்டன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மகேந்திர சிங் தன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நடந்து முடிந்த அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். மூன்று முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

csk-vs-mi

அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது வரை நான்கு முறை கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக சிறந்த பேட்ஸ்மேனாக ஏபி டிவில்லியர்ஸ், சிறந்த பந்து வீச்சாளராக மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த லசித் மலிங்கா தேர்வு செய்யப்பட்டனர்.

ABD

இந்த வருடம் கொரோனா பாதிப்பினால் இந்த தொடர் நடைபெறவில்லை என்றாலும் கிரிக்கெட் குறித்த பல்வேறு செய்திகள்ம், வீரர்களின் உரையாடல் மற்றும் சொந்த அனுபவங்கள் என அனைத்தும் தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement