மீண்டும் பார்முக்கு திரும்பிய ஸ்டைன்.! புஜராவை அவுட் செய்த வீடியோ உள்ளே..

styen
- Advertisement -

தென்னாப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டேயின் அந்த அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுபவர். இரண்டரை ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் மீண்டும் திரும்பியுள்ளார் ஸ்டேயின் இப்போதும் தனது பந்து வீச்சு திறமையில் எந்த ஒரு குறையும் இல்லை என்று நிரூபித்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஸ்டேயின் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இங்கிலாந்து அணியில் நடந்து கவுண்டி தொடரில் ஹம்ப்ஷெயர் அணியில் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் யோர்க்கிஸ் அணியுடன் ஹம்ப்ஷெயர் அணி மோதியது. இந்த2 போட்டியில் யோர்க்கிஸ் அணியில் விளையாடி வந்த இந்திய வீரர் புஜராவை அற்புதமாக போல்ட் செய்து அசதியுள்ளர் ஸ்டெயின்.

ஸ்டெயின் வீசிய பந்து பஜராவின் பேட்டிற்க்கும் காலில் அணிந்திருந்த பேடிற்கு இடையே லாவகமாக புகுந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மேலும், அடுத்த மாதம் இலங்கை அணியுடன் மோதவுள்ள தென்னாபிரிக்கா அணியில் விளையாடவுள்ளார் ஸ்டெயின். இந்த தொடரில் 3 விக்கெட் டுகளை எடுத்தால் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை பெற்ற தென்னாப்ரிக்க வீரர் என்ற ஷான் போல்லாக்கின் சாதனையை முறியடிப்பார்.

Advertisement