2011-ல் தோனி சச்சினுக்காக செய்ததை 2020-ல் கோலி தோனிக்காக செய்யணும் – ஸ்ரீசாந்த் விருப்பம்

Srisanth-4
- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்ற சூதாட்டத்தில் பங்கேற்றதாக கடந்த 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டார். அதன் பிறகு தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு வரும் செப்டம்பர் முதல் அவர் கிரிக்கெட் விளையாடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Srisanth 1

- Advertisement -

இதனையடுத்து மீண்டும் கேரள கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கேரள ரஞ்சி அணிக்காகவும் தற்போது ஸ்ரீசாந்த் தகுதி பெற்று விட்டார். அதற்கான தீவிர பயிற்சியிலும் தற்போது அவருக்கு ஈடுபாடு காட்டி வருகிறார். இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த் 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் என இரு அணியிலும் முக்கிய பங்களிப்பை அவர் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் அடிக்டர் என்ற இணையதளத்திற்கு பேட்டி அளித்த ஸ்ரீசாந்த் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Srisanth

அதில் அவர் இந்தாண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர் குறித்து கூறியதாவது : தோனி நிச்சயமாக அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். அதற்கு முன் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என நான் நினைக்கிறேன். அப்போது நாம் தோனியின் அசத்தலான பேட்டிங்கை நிச்சயமாக காண முடியும்.

- Advertisement -

தோனி ஓய்வு குறித்து இவ்வளவு செய்திகள் வெளியாகியும் மிகவும் அமைதியாக இருக்கிறார். ஆனால் அவருக்கு எப்போது எதனை செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். மேலும் தொடர்ந்து பேசிய ஸ்ரீசாந்த் : தோனி இந்த நாட்டுக்காக விளையாடுகிறார் அதுமட்டுமில்லாமல் ராணுவத்தில் கௌரவ பதவியிலும் இருக்கிறார்.

sachin

ஆனால் அவருக்கு அரசியல் மீது எப்போதும் ஆர்வம் இருந்தது கிடையாது ஆனால் சேவை செய்வதில் விருப்பம் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை முடிந்த பின்னர் சச்சின் டெண்டுல்கரை எப்படி தோள்களின் மீது சுமந்து மைதானத்தை சுற்றினோமோ அதே போன்று வரும் டி20 உலகக் கோப்பை வென்ற பின்பு தோனிக்கு அதை செய்ய வேண்டும் என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். தோனிக்காக நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement