ஹர்பஜன் சிங் என்னை அறைந்த பிறகு அன்று இரவு நடந்தது என்ன தெரியுமா ? – மனம் திறந்த ஸ்ரீசாந்த்

- Advertisement -

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனின் போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே ஒரு போட்டி நடைபெற்றது. இந்த போட்டி முடிந்த பின்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் ஹர்பஜன் சிங்கை தொந்தரவு செய்து கொண்டிருந்தார் போலிருக்கிறது. இதன் காரணமாக கடுப்பான ஹர்பஜன் சிங் திடீரென ஸ்ரீசாந்த் கன்னத்தில் பொதுவெளியில் பளாரென அறைந்தார்.

Srisanth 1

- Advertisement -

பின்னர் விதிகளை மீறியதற்காக அந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. ஹர்பஜன் சிங்கிடம் அதை வாங்கி விட்டு கண்ணீர் மல்க மைதானத்தில் அழுதுகொண்டிருந்த ஸ்ரீசாந்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் மீடியாக்களிலும் வைரலாக பரவியது. இந்நிலையில் அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது பேசியுள்ளார் ஸ்ரீசாந்த்.

எனக்கும் ஹர்பஜன் சிங்கிற்கும் நடந்த அந்த சம்பவம் அப்போதே முடிந்து விட்டது. நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிட்டோம். அந்த போட்டிக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் தலையிட்டு எங்களை சமாதானப்படுத்தி அனுப்பினார். அப்போதே அனைத்தையும் பேசி மறந்தும் விட்டுவிட்டோம் என்று ஸ்ரீசாந்த் கூறினார்.

srisanth 3

மேலும் இந்த சம்பவம் குறித்து அப்போது விசாரணையும் நடந்தது. அப்போது விசாரணை அதிகாரியிடம் அவருக்கு தடை எதுவும் விட்டுவிட வேண்டாம் என அழுது கெஞ்சினேன். மேலும், நாங்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடும் சூழல் வரும் அவர் எனக்கு அண்ணன் போண்றவர் இதனால் அவருக்கு தடை விதித்து விடவேண்டாம் என்று கெஞ்சினேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீசாந்த்.

srisanth 2

ஸ்ரீசாந்தின் இந்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சூதாட்ட பிரச்சனையில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள ஸ்ரீசாந்த் செப்டம்பர் மாதம் முதல் கிரிக்கெட் விளையாடலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் கேரளா அணிக்காக அவர் ரஞ்சி தொடரிலும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement